‛‛பாஜக 100 இடங்களில் கூட வெல்லாது’’.. வரும் லோக்சபா தேர்தலில் ‛தாமரை’ வாடும்.. கார்கே சொன்ன ஆரூடம்
லக்னோ: 400 தொகுதிகளில் வெற்றி எனக்கூறும் பாஜக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநில வாரியாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் அனைத்து கட்சிகளும் பணிகளை தொடங்கி உள்ளன. 2014, 2019 ஆகிய தேர்தல்களை தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. இதற்கான வியூகத்தை பாஜக மேற்கொண்டு வருகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 370 தொகுதிகளில் பாஜகவும், மொத்தமாக பாஜக கூட்டணியான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளை வெல்லவும் இலக்கு நிர்ணயித்து களப்பணியை தொடங்கி உள்ளது. இது ஒருபுறம் இருக்க பாஜகவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்பட மொத்தம் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இந்த கூட்டணி சார்பில் தற்போது மாநிலங்களில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை என்பது நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் ராகுல் காந்தியின் ‛பாரத் ஜோடோ நியாய யாத்திரை' மணிப்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை என்பது தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் நுழைந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக இடங்களில் வென்றால் அது மத்தியில் ஆட்சியமைக்க உதவியாக இருக்கும். தற்போது இங்கு பாஜகவுக்கு 62 எம்பிக்கள் உள்ளனர். மாறாக ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்பி மட்டுமே உள்ளார். அதுவும் சோனியா காந்தி தான். 2019 நாடாளுமன்ற தேர்தலில் அவர் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேவேளையில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றார்.
சோனியா காந்தி வென்ற ரேபரேலி மற்றும் ராகுல் காந்தி தோற்ற அமேதி ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளாகும். இருப்பினும் கடந்த தேர்தலில் ராகுல் காந்தி அமேதியில் வீழ்ந்தார். இந்நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி ‛பாரத் ஜோடோ நியாய யாத்திரையை' தொடங்கி உள்ளார்.
நேற்று ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் யாத்திரை பொதுக்கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசினார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமேதியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் அதில் பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. இந்த திட்டங்கள் ஏன் நிறைவேற்றப்படவில்லை என அவர்களிடம் (பாஜகவினர்) கேட்கிறேன். ஏனென்றால் அமேதி மற்றும் ரேபரேலிக்கு வேலை செய்ய அவர்கள் விரும்பவில்லை.
ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கடுமையாக உழைத்த பூமி இது. உங்களுக்கும் (அமேதி மக்கள்) அவர்களுக்கும் (காந்தி குடும்பம்) ஆழமான உறவு உள்ளது. இரு தொகுதிகளுக்கான திட்டங்களை அவர்கள் முடக்கிவிட்டனர். இரு தொகுதி மக்களிடமும் காங்கிரஸ் கட்சி மீது பகையை வளர்க்க பாஜக சதி செய்கிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெல்லும் என்ற முழக்கத்தை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார். 400க்கும் அதிகமான இடங்களை பாஜக கூட்டணி வெல்ல வேண்டும் என அவர் கூறி வருகிறார். ஆனால் உண்மையில் 100 தொகுதிகளை கூட பாஜகவால் தாண்ட முடியாது. அதோடு இந்த முறை பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார்கள். காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ள பிரதமர் மோடிக்கு இந்த தேர்தலில் மக்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள்'' என பேசினார்.
உத்தர பிரதேசத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரெயோரு எம்பியாக சோனியா காந்தி மட்டுமே உள்ளார். தற்போது அவரும் ராஜ்யசபா எம்பியாக முடிவு செய்து ராஜஸ்தானில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனால் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலியில் அவரது மகள் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அதேபோல் அமேதி மட்டுமின்றி இன்னொரு தொகுதியையும் சேர்த்து 2 தொகுதிகளில் மீண்டும் ராகுல் காந்தி களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications