உபி ஹத்ராஸில் மருத்துவமனை முழுவதும் நிரம்பி வழியும் உடல்கள்.. ஒரே ஒரு மருத்துவர் இருந்ததாக புகார்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மத வழிபாட்டுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122ஐ கடந்திருக்கிறது. ஆனால் சிகந்த்ரா மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் பலர் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராவ் அருகே உள்ள முகல்கர்ஹி கிராமத்தில் போலே பாபாவின் (Bole Baba) நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்ததால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் நகரவே முடியாத அளவுக்கு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோரின் உடல்கள் வந்ததால் அரசு மருத்துவமனைகள் முழுவதும் உடல்கள் நிரம்பி வழிகின்றது. அத்துடன் 150க்கும் மேற்பட்டோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் சிகந்த்ரா மருத்துவமனையில் இல்லை என்று கூறப்படுகிறது. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இல்லை என்றும் மூத்த மருத்துவர்கள் யாரும் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே குறிப்பிட்ட மருத்துவமனையில் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வளவு பெரிய விபத்து நடந்த நிலையில் உயர் அதிகாரிகள் யாருமே உடனே வரவில்லை என்றும் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை இங்கு நடத்த போலே பாபாவுக்கு அனுமதி வழங்கியது யார் என்றும் அரசு நிர்வாகம் எங்கே போனது? என்றும் பொதுமக்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்கள்.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் டிரக்குகள், டெம்போக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சை மையத்திற்கு கொண்டு வரப்பட்ட வீடியோக்கள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வீடியோவில், சிகிச்சை மையத்திற்கு வெளியே தரையில் பெண்களின் சடலங்கள் கிடந்தது. இதனிடையே குறிப்பிட்ட மருத்துவமனை மற்றும் எட்டா மாவட்ட தலைமை மருத்துவமனையில் தற்போது மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார். முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளித்து, நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். ஆக்ரா ஏடிஜி மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் சம்பவத்திற்கான காரணத்தை விசாரிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யாநாத் வெளியிட்ட ட்வீட் பதிவில், "ஹத்ராஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் மனவேதனையை கொடுக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் துறை ரீதியான அதிகாரிகளை உடனடியாக மீட்புப் பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளேன். போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்,” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்தின் போதே, ஹத்ராஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். “இந்த விவாதத்திற்கு இடையே எனக்கு ஒரு சோகமான செய்தி எனக்கு கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளன. இறந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என்றார். இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications