ஒருவழியா சாதிச்சிட்டீங்க.. உத்தரப் பிரதேச முதலமைச்சருக்கு வாழ்த்து சொன்ன பிரிட்டன் எம்.பி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைதியை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் இந்திய வம்சாவழியை சேர்ந்த பிரிட்டன் எம்.பி வீரேந்திர சர்மா கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியை பாராட்டி பிரிட்டன் எம்பி வீரேந்திர சர்மா வாழ்த்து அட்டையை அனுப்பியுள்ளார். அதில், "யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு, உ.பி.யில் சிறந்த வெற்றிகளைப் பெற்று மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தியதற்காக உங்களை வாழ்த்த விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் எற்கெனவே மாஃபியாக்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வந்ததாகவும், அதை பாஜகதான் கட்டுப்படுத்தியது என்றும் பலமுறை யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.
இப்படி இருக்கையில் பிரிட்டன் நாட்டின் எம்பி ஒருவர் உத்தரப் பிரதேச முதல்வர் குறித்து பாராட்டி எழுதியிருப்பது உ.பி அரசுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த அங்கீகாரம் உ.பியை ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிக்கு ஊக்கமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அதையடுத்து நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கியது என தொடர்ச்சியாக உ.பி அரசின் செயல்பாடுகள் பெரும் கவனத்திற்குள்ளாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications