லாட்ஜ் ரூமில் நள்ளிரவில் நடந்த கொடுமை.. தொழிலதிபரை அடித்தே கொன்ற போலீசார்.. கதறிய மனைவி.. ஷாக்

கான்பூர் தொழிலதிபரை போலீசார் அடித்து கொன்றுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: லாட்ஜிர் தங்கியிருந்த தன் கணவரை போலீசார் அடித்து கொன்றுவிட்டதாகவும், இந்த அநியாய மரணத்துக்கு நியாயம் வேண்டும் என்றும் பெண் ஒருவர் உபி அரசிடம் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் மனிஷ் குப்தா.. 38 வயதாகிறது.. ரியல் எஸ்டேட் தொழிலதிபர்.. கோரக்பூரில் உள்ள லாட்ஜில் தன்னுடைய நண்பர்களுடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அவர் திடீரென இறந்துவிட்டதாக கூறப்பட்டது.. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மதுபோதையில் இருந்தால், கீழேவிழுந்து அடிபட்டு இறந்ததாக போலீசார் காரணம் சொன்னார்கள்..

 மர்ம மரணம்

மர்ம மரணம்

ஆனாலும் அந்த மர்ம மரணம் பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தியபடியே இருந்தது. இந்நிலையில், தொழிலதிபர் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. நடந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது: தொழிலதிபர் மனிஷ்குப்தா, கான்பூரை சேர்ந்தவர்.. இவரது நண்பர் சந்தன் சைனி என்பவர் கோரக்பூரில் உள்ளார்.. மேலும் ஹர்தீப் சிங், சவுகான் போன்ற நண்பர்களை நீண்ட காலம் கழித்து தொடர்பில் வந்துள்ளனர்..

 ஹோட்டல் ரூம்

ஹோட்டல் ரூம்

அதனால், நண்பர்கள் அனைவரும் நேரில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.. இதற்காகவே தொழிலதிபர் கோரக்பூரில் சென்று அங்கு லாட்ஜ் ஒன்றில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்... நண்பர்களும் தொழிலதிபரை வந்து சந்தித்து மகிழ்ச்சியுடன் பேசியுள்ளனர்.. சம்பவத்தன்றும் லாட்ஜுக்கு வந்து பேசியுள்ளனர்.. மறுநாள் அனைவரும் பிக்னிக் போகவும் முடிவாகி உள்ளது.. நண்பர்கள் அனைவரும் ரூமை விட்டு சென்றபிறகு, போலீஸ் லாட்ஜை வழக்கம்போல சோதனை செய்ய வந்துள்ளது..

 சோதனை

சோதனை

சந்தேகத்துக்கிடமானவர்கள் யாரேனும் தங்கியிருக்கிறார்களா என்பதை கண்காணித்து வந்தது.. அப்போதுதான் நடுராத்திரி தொழிலதிபர் ரூமுக்குள் சென்றுள்ளனர்.. அத்துமீறி சோதனை செய்துள்ளனர்.. இதை தட்டி கேட்டதால்தான் தகராறு வெடித்துள்ளது.. அடித்தே அவரை போலீசார் கொன்றுள்ளதாக தெரிகிறது.. தொழிலதிர் தலையில் ரத்த காயம் இருந்தாகவும், அவரை அந்த ரூமை விட்டு இழுத்து வந்தபோது நேரில் பார்த்ததாகவும் அவரது நண்பர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

 கொலை வழக்கு

கொலை வழக்கு

இதையடுத்து, ரெய்டு என்ற பெயரில் லாட்ஜுக்குள் நுழைந்த போலீசார் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது... இதனிடையே, தொழிலபதிர் மனிஷின் மனைவி மீனாட்சி, தன் கணவரின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.. கோரக்பூர் போலீசார் தன் கணவரை கணவரை அடித்து கொன்றுள்ளனர் என்றும், லாட்ஜ் ஊழியர்கள் ரத்த கறையை துடைத்து கொலையை மறைக்க உதவியிருக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்..

 அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த விவகாரம் உபியில் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இந்த கொலை விசாரணையை கான்பூருக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.. இதனிடையே, தொழிலதிபர் மனிஷ் மரண வழக்கை, கொலை வழக்காக மாற்றிய கோரக்பூர் மாவட்ட எஸ்பி சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.. மேலும் சில போலீசார் தப்பியோடியுள்ளதால், அவரகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+