வாரணாசியை வாரி சுருட்டும் கொரோனா.. ஏப்ரல் மாதம் வரை.. பக்தர்களுக்கு வந்த புது அறிவிப்பு..!
உத்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளது
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தை கொரோனா வைரஸ் தாக்கம் மிகுந்துள்ளதால், வாரணாசிக்கு பக்தர்கள் இந்த ஏப்ரல் மாதம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த 10 நாட்களாகவே கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,99,376 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒரேநாளில் கிட்டதட்ட 2 லட்சம் பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலம்
அந்த வகையில் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் வைரஸ் பரவலால் சிக்கி உள்ளன.. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில், அந்தந்த அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், உபியிலும் தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வாரணாசியில் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள்
காரணம் இங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு வழக்கமாக இந்த சமயங்களில் பக்தர்கள் குவிவது வழக்கம்.. அதனால்தான், சில தினங்களுக்கு முன்புகூட, இந்த கோவிலின் கர்ப்ப கிரகத்திற்குள் பக்தர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.. வாரணாசிக்கு வருகை தர விரும்பும் பக்தர்கள் பாபா விஸ்வநாத்தின் ஆலயத்தில் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்றும் ஆலய நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

அறிவுறுத்தல்
இப்போது, வாரணாசிக்கே பக்தர்கள் வருவதை இந்த மாதம் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது... பரவி வரும் தொற்றை குறைக்க, உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.. அதேபோல காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நுழைவதற்கு, கொரோனா டெஸ்ட் குறித்த நெகட்டிவ் சர்டிபிகேட் கையில் வைத்திருந்தால்தான் அனுமதி தர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுக்கை வசதி
இப்போதைக்கு வாரணாசியில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு இருப்பதாலும், மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாலும், இத்தகைய கட்டுப்பாடுகளும், தற்காலிக தடைகளும் சுற்றுலா பயணிகளுக்கு 2 வாரங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 1192 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications