பாஜக ஆட்சியில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஊழல் நடக்கிறது.. அதிர வைத்த சொந்த கட்சி நிர்வாகி
லக்னோ: பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தர பிரதேசத்தில் வட்டார அளவில் ஊழல் மலிந்து காணப்படுவதாக சொந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராஜ் பிரதாப் சிங் விமர்சித்து இருப்பது பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார். உத்தர பிரதேசத்தில் வரும் 2027 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் பாஜகவிற்கு பெரும் அதிர்ச்சி கிடைத்தது.

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமாகவும் பாஜகவின் கோட்டை என்று அக்கட்சியினரால் சொல்லப்பட்டு வந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் அக்கட்சி 36 இத்தனை இடங்களில் மட்டுமே வென்றது. மொத்தம் உள்ள 80 இடங்களில், இந்தியா கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் 2027 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவிற்கு பெரும் சவால் காத்திருக்கிறது என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதனிடையே உத்தர பிரதேசத்தில் அடிமட்ட அளவில் ஊழல் மலிந்து கிடப்பதாக பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பிரதாப் சிங் பேசியிருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராஜேந்திர பிரதாப் சிங்க் என்ற மோதி சிங் என்பவர் கூரியதாவது:-
எனக்கு இதை சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை. 42 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இப்படிபட்ட ஒரு ஊழலை நான் கற்பனை செய்து கூட பார்த்தது இல்லை.. வட்டார அளவில் காவல்துறை அளவில் ஊழல் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மலிந்து கிடக்கிறது. இன்று யாராவது பைக்கில் சென்றால் உடனடியாக பிடிக்கப்படுகிறார்கள். கூடுதலாக ஒரு பல்ப் மாட்டியிருந்தால் கூட கொள்ளையர்கள் அதிகார காவல் நிலையத்தில் இருந்து வழக்கு போடுவோம் என அச்சுறுத்துகிறார்கள்.
கிரிமினல்களை போல் மக்கள் நடத்தப்படுகிறார்கள். தவறே செய்யாவிட்டாலும் நாம் கிரிமினல்கள் ஆகிவிடுகிறோம்" என்றார். பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், யோகி ஆதித்யநாத்தின் கேபினட்டில் இடம் பெற்று இருந்த மாஜி அமைச்சர் ஒருவர் தனது சொந்த கட்சியின் ஆட்சியை விமர்சித்து பேசி இருப்பது உத்தர பிரதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள பாட்டி தொகுதியில் போட்டியிட்டு சிங் வெற்றி பெற்றார். யோகி ஆதித்யநாத் அவருக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுத்தார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக ராஜேந்திர பிரதாப் சிங் பதவி வகித்தார். ஆனால், 2022 சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளரிடம் ராஜேந்திர பிரதாப் சிங் தோல்வியை தழுவினார்.












Click it and Unblock the Notifications