போதைப்பொருள் நடமாட்டம்.. கிடுக்கிப்பிடி போடும் யோகி அரசு.. காவல்துறையில் அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு எதிரான நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த யோகி அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, காவல்துறையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படை (ANTF) என்ற ஒரு பிரிவு சிறப்பாக செயல்படும் வகையில் ஒரு புதிய முடிவை யோகி அரசு எடுத்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். உத்தர பிரதேசத்தில் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு எதிரான நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த யோகி அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, காவல்துறையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படை (ANTF) என்ற ஒரு பிரிவு சிறப்பாக செயல்படும் வகையில் ஒரு புதிய முடிவை யோகி அரசு எடுத்துள்ளது.

 Drug traffic, The Yogi government is tying the knot, Dramatic change in the police

அதாவது காவல்துறையில் பணியாற்றுபவர்களை இந்த தடுப்பு படை பிரிவுக்கு மாற்றும் கொள்கைக்கு ஒப்புதலை யோகி ஆதித்யநாத் கொடுத்துள்ளார். இந்த புதிய கொள்கையின் படி, ANTF படைக்குள் 450 போலீசாரை காவல்துறை டெபுடேஷனில் நியமித்துக் கொள்ள முடியும்.

இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர், கான்ஸ்டபிள்ஸ், கான்ஸ்டபிள் டிரைவர்ஸ், சப் இன்ஸ்பெக்டர்(ரகசிய பிரிவு), சப் இன்ஸ்பெக்டர்/ உதவி சப் இன்ஸ்பெக்டர் (கிளர்க்) சப் இன்ஸ்பெக்டர்ஸ்/ உதவி சப் இன்ஸ்பெக்டர்ஸ் (அக்கவுண்ட்ஸ்) மற்றும் கம்யூட்டர் ஆபரேட்டர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த புதிய டிரான்ஸ்பர் கொள்கைக்கு யோகி அரசு ஒப்புதல் அளித்ததும் இந்த பதவிகளுக்கான தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ANTF டிஐஜி அப்துல் ஹமீத் கூறுகையில், "போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படை சிறப்பாக பணியாற்றுவதற்காக 450 பேரை நியமிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, இந்த பதவிகளுக்கு அதிகாரிகளும் காவலர்களும் நியமனம் செய்யப்பட்டனர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+