குடிபோதையிலும் தெளிவை பாருங்க.. தன்னை கடித்த பாம்பை.. 3 துண்டாக கடித்து துப்பிய இளைஞர்
தன்னை கடித்த பாம்பை 3 துண்டாக போதை நபர் கடித்து துப்பினார்
Recommended Video
லக்னோ: செம போதையில் இருந்த இளைஞரை பாம்பு கடித்துவிட்டது.. இளைஞருக்கு என்ன ஆச்சோ என்று பதற வேண்டாம்.. இந்த குடிமகன் தன்னை கடித்த பாம்பை 3 துண்டாக கடித்து துப்பி விட்டார்.
உத்தரப்பிரதேசத்தின் எடா மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் ராஜ்குமார். சம்பவத்தன்று ராஜ்குமார் தண்ணி அடித்துவிட்டு வீட்டில் போதையில் தூங்கி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து, அவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று நுழைந்துவிட்டது.
பின்னர், தூங்கி கொண்டிருந்த ராஜ்குமாரின் காலில் கடித்துள்ளது. அந்த போதையிலும் பாம்பு கடித்த வலியால் துடித்துள்ளார் ராஜ்குமார்.

ஆத்திரம்
கண்ணை திறந்து பார்த்தால், தன் காலில் பாம்பு இன்னமும் கொத்தி கொண்டிருப்பதை கண்டு ஷாக் ஆனார். அடிச்சி கொல்லலாம்னு பார்த்தால், பக்கத்தில் எதுவுமே கையில் கிடைக்கவில்லை. அதனால் இன்னும் ஆத்திரம் ஆனதால், பாம்பை கையில் பிடித்து கடித்து துப்பியுள்ளார்.

விஷம்
ஒருமுறை இல்லை.. 3 முறை கடித்து கடித்து துப்பிவிட்டார். அந்த இடமே ரத்தக்களறியாக காட்சியளித்தது. இதில் பாம்பு விஷம் ராஜ்குமார் மண்டைக்கு ஏறிவிட்டது. போதை + விஷம் இரண்டும் சேர்ந்ததால் அங்கேயே மயங்கிவிழுந்துவிட்டார் ராஜ்குமார். வீட்டிலிருந்தோர் இதை பார்த்து பதறியடித்து கொண்டு, உடனடியாக ராஜ்குமாரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சிகிச்சை
விஷயத்தை சொன்னதும், டாக்டரே ஆடிப்போய்விட்டார். அது மட்டுமில்லை.. அந்த ஆஸ்பத்திரியில் பாம்பு கடிக்கு சரியான மருந்து மாத்திரைகளும் இல்லாததால் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக சொன்னார்கள். இப்போது இன்னொரு ஆஸ்பத்திரியில் ராஜ்குமார் சீரியஸான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஈமச்சடங்கு
ஆனால், ராஜ்குமார் கடித்த உடனேயே பாம்பு அங்கேயே துடிதுடித்து செத்துவிட்டது. அதனால் உயிரிழந்த பாம்புக்கு குடும்பத்தினர் ஈமச்சடங்குகள் செய்து புதைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications