"வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் போன்ற ஒருவரா உங்களை மீண்டும் ஆள வேண்டும்?" விளாசும் ராகேஷ் டிக்கைட்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் பாஜகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேசம். பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இதில் நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இப்போது அங்கு ஆட்சியில் உள்ள பாஜக ஆட்சியைத் தக்க வைக்கத் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

 உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

இருப்பினும், கடந்த தேர்தலைப் போல இந்த முறை தேர்தலில் பாஜகவால் எளிதாக வெல்ல முடியாது. கடந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக இருந்த ஜாட் சமூகத்தினர் அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளனர். குறிப்பாக, அங்குள்ள பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூட பாஜக மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து, அங்குள்ள விவசாய அமைப்புகளும் பாஜக மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

 சர்வாதிகாரி வேண்டுமா

சர்வாதிகாரி வேண்டுமா

இந்நிலையில் 11 மாத விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்திய ராகேஷ் டிக்கைட் பாஜகவை மீண்டும் சாடியுள்ளார். உ.பி-இல் பேசிய ராகேஷ் டிக்கைட், "மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சரும் பிரதமரும் உங்களுக்கு வேண்டுமா அல்லது வடகொரியா கிம் ஜாங் போன்ற ஒருவர் வேண்டுமா என்பதை உ.பி. மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எந்த மாநிலத்திலும் சர்வாதிகார ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. மக்கள் தங்கள் வாக்குகளைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும்.

 மக்கள் ஆதரவு

மக்கள் ஆதரவு

வளர்ச்சி மற்றும் மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் தான் விவசாயிகளுக்கு முக்கியம். உத்தரப் பிதேச வாக்காளர்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். இந்து மற்றும் முஸ்லிம் மக்களைப் பிளவுபடுத்துவோருக்கு மக்கள் ஆதரவு தரமாட்டார்கள். மக்கள் என்றும் தங்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுபவர்களுக்கு மட்டுமே ஆதரவளிப்பார்கள். பாகிஸ்தான் மற்றும் ஜின்னாவை பற்றி மட்டும் பேசுவோருக்கு இல்லை" என்று சாடி பேசினார்.

 இந்து-முஸ்லிம் மத சண்டை

இந்து-முஸ்லிம் மத சண்டை

ராகேஷ் டிக்கைட் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது முதலே பாஜகவையும் பிரதமர் மோடியையும் தொடர்ச்சியாகச் சாடி வருகிறார். கடந்த வாரம் கூட, "மேற்கு உத்தரப்பிரதேசம் வளர்ச்சி பற்றிப் பேச விரும்புகிறது. இந்து, முஸ்லீம், ஜின்னா, மதம் குறித்து மட்டுமே பேசுபவர்களுக்கு வாக்கு இல்லை. முசாபர்நகர் இந்து-முஸ்லிம் மதச் சண்டைகளுக்கான ஸ்டேடியம் இல்லை" என்று கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இப்படி விவசாயச் சங்கங்கள் தொடர்ச்சியாக பாஜகவை எதிர்த்து வருவதும் தேர்தல் முடிவுகளை மாற்றலாம் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

 7 கட்ட தேர்தல்

7 கட்ட தேர்தல்

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு இதுவரை 2 கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 3ஆம் கட்டமாக வரும் பிப். 20ஆம் தேதி 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இது தவிரப் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் களத்தில் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+