லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹத்ராஸ் வழக்கு.. வீதிக்கு வந்த வால்மீகி சமூகத்தினர்- போலீஸ் இடையே கல்வீச்சு.. வன்முறை

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரசேதத்தின் ஹத்ராஸில் 20 வயது தலித் பெண் உயர் ஜாதியைச் சேர்ந்த 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு போராடிய வால்மீகி சமூகத்தினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஆக்ரா மற்றும் ஃபிரோசாபாத்தில் கற்களால் வீசி தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரசேதத்தின் ஹத்ராஸில் 20 வயது தலித் பெண்ணை உயர் சாதியைச் சேர்ந்த நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்தார். அவர் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். உயிரிழந்த பெண் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

Hathras case: violent clashes, stone-pelting between Valmiki community and police in Agra

இவரது படுகொலைக்கு நீதி கேட்டு வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆக்ரா மற்றும் ஃபிரோசாபாத்தில் வீதிகளில் வந்து யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசாங்கத்தையும், ஹத்ராஸ் வழக்கை உ.பி. காவல்துறை கையாண்ட விதத்தையும் எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு முதல்வர் யோகி உத்தரவுஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு முதல்வர் யோகி உத்தரவு

இதையடுத்து ஆக்ராவின் லோஹா மண்டி பகுதியின் ராஜ் நகர் காலனிக்கு ஆர்பாட்டத்தை கலைக்க சென்ற போலீசார் அவர்களை செல்ல வற்புறுத்தியது. அத்துடன் காவல்துறையினர் அவர்களை நோக்கி வந்தனர். இதை கண்ட அவர்கள் கற்களை வீசத் தொடங்கினர். இதற்கு பதிலடியாக போலீசாரும் காவல்துறையினர் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இரு தரப்பு மோதல் வன்முறையாக மாறியது.

Hathras case: violent clashes, stone-pelting between Valmiki community and police in Agra

இந்த கல்வீச்சு சம்பவ மோதல் நகரத்தின் பிற பகுதிகளில் பதட்டத்தை அதிகரித்தது மற்றும் வால்மீகி சமூக உறுப்பினர்களின் குழுக்கள் பல பகுதிகளில் போராட தொடங்க்னர்.

இதேபோல், ஃபிரோசாபாத்தில், யுவ வால்மீகி படைத் தலைவர் அனுராக் சவுகான் மற்றும் விகாஸ் வால்மீகி தலைமையிலான வால்மீகி சமூக உறுப்பினர்கள் குழுவினர் கூடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். நகரின் மையப்பகுதியில் வந்த அவர்கள் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதை போலீசார் முறியடித்தனர். இதனால் இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து நீர் பூத்த நெருப்பாக மோதல்கள் நடந்து வருவதால் உத்தரப்பிரதேசத்தில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

English summary
violent clashes involving stone-pelting broke out between members of the Valmiki community and the police in Agra and Firozabad on Saturday over the alleged gangrape and murder of a 19-year-old Dalit woman in Hathra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X