"வெறித்தனம்".. புடவை மாற்ற மணமகள் ரூமுக்கு சென்ற பெண்.. பின்னாடியே போன இளைஞர்.. திடீர்னு ஒரே அலறல்
துப்பாக்கியை எடுத்து காதலியை மணமேடையிலேயே சுட்டுவிட்டார் இளைஞர்
லக்னோ: காதல் தோல்வியின் விரக்தியானது, ஒருவரை எந்த அளவுக்கு கொண்டு போய் விட்டுவிடும் என்பதற்கு உதாரணம்தான் இந்த செய்தி.
உத்தரபிரதேசத்தில் நாளுக்கு நாள் வன்முறைகள் வெடித்து கிளம்பி வருகின்றன.. பெண் பிள்ளைகளுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகி கொண்டிருக்கும் இந்த சூழலில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அந்த மாநிலத்தில் நடக்கும் திருமணத்திலும் வன்முறை தலைதூக்கி உள்ளது.. உத்தரபிரதேச மாநிலம் மதுரா பகுதியை சேர்ந்தவர் அந்த இளைஞர்..

முகூர்த்தம்
அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மிக தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு முபாரிக்பூர் கிராமத்தில் நௌஜீல் பகுதியில் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது.. முகூர்த்த நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. காதலிக்கு நிச்சயம் ஆன விஷயம் தெரிந்ததில் இருந்து, இளைஞர் அதிர்ச்சியில் இருந்தார்.. கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளானார்..

வெறித்தனம்
காதலி தன்னை விட்டு போய்விட்டார், இன்னொருத்தருடன் கல்யாணம் ஆக போவதாக அழுது கொண்டே புலம்பி வந்துள்ளார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், திருமண நாளும் வந்தது. தடபுடலான ஏற்பாடுகளை மணமக்கள் சார்பில் மண்டபத்தில் செய்து கொண்டிருந்தார்கள்... . மண்டபத்தில் உறவினர்கள், நண்பர்கள், ஊரே கூடியிருந்தனர்.. மணமக்களுக்கு வரவேற்பு நடந்து முடிந்தது.. மணமகள் வேறு உடையை அணிந்து கொள்ள மணமகள் அறைக்கு சென்றார்.. அந்த நேரம் பார்த்து, அந்த இளைஞர், மண்டபத்திற்குள் வெறித்தனத்துடன் நுழைந்தார்..

சுருண்டு விழுந்தார்
மணமகள் அறைக்கு காதலி சென்றபோது, பின்னாடியே சென்ற இளைஞர், கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சரமாரியாக சுட்டார்... இதில் சம்பவ இடத்திலேயே மணமகள் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.,.. துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் உறவினர்கள் அலறி அடித்து கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடினார்கள்.. ஆனால், அதற்குள் மணமகள் இறந்துவிட்டார்.

ஜெய்மாலா
இதுகுறித்து ஏன்ஐ-யிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பா குபி ராம் பிரஜாபதி சொல்லும்போது, "என் மகள் "ஜெய் மாலா' திருமண சடங்கு முடிந்து மணமகள் அறைக்கு சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து சுட்டுக்கொன்றுவிட்டார்.. இதை என்னால் நம்பவே முடியவில்லை" என்று அழுது கொண்டே சொன்னார்.. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பா, போலீசுக்கு சென்று புகாரும் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications