15 நிமிடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பது எப்படி? கோச்சிங் சென்டர் நடத்திய டான்.. திடுக் தகவல்
லக்னோ: "15 நிமிடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடுவது எப்படி?" என்று கோச்சிங் சென்டர் நடத்திய பீகார் இளைஞரை உத்தரப்பிரதேச மாநில போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
பீகார் மாநிலம் சாப்ராவைச் சேர்ந்த சுதிர் மிஸ்ரா என்பவர் ஒரு வித்தியாசமான 'ஸ்டார்ட்அப்' ஆரம்பித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு '15 நிமிடங்களில் ஏடிஎம்களை உடைப்பது எப்படி என்று ' பயிற்சி அளிக்கும் கோச்சிங் சென்டரை நடத்தி வந்திருக்கிறார்.

இந்த சம்பவம் எப்படி வெளியே தெரியவந்தது: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி என்ற பகுதியில் உள்ள ஏடிஎம்மில் இருந்து ரூ.39.58 லட்சம் திருடு போனது. திருடியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்த உத்தரப்பிரதேச போலீசார், லக்னோவைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்பட மொத்தம் 1,000 சிசிடிவி காட்சிகளை வைத்து, ஏ.டி.எம். திருட்டு குற்றவாளிகளை தேடினார்கள்.
போலீசாருக்கு ஏடிஎம் அருகே உள்ள வீட்டில் இருந்து சிசிடிவி குற்றவாளிகளை கண்டுபிடிக்க பெரிய உதவியாக இருந்தது. அந்த சிசிடிவியில் பார்த்த போது, குற்றவாளிகள் கொள்ளையடித்துவிட்டு நீல நிற கார் மூலம் நகருக்குள் நுழைந்து தப்பியோடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த காரை உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் சாலையில் மடக்கிய போலீசார், நான்கு இளைஞர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 9.13 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், வேறு யாரேனும் சம்பவத்தின் பின்னணியில் உள்ளார்களா என்று விசாரித்துள்ளார்கள். அப்போது அவர்கள், ஏடிஎம்மை உடைக்க கோச்சிங் சென்டர் நடத்தியவரிடம் பயிற்சி பெற்றதாக கூறியிருக்கிறார்கள். இந்த விஷயத்தை கேட்டு உத்தரப்பிரதேச போலிஸ் ஆடிப்போயிருக்கிறார்கள். திருடியவர்களை பிடித்துள்ள போலீசார் இவர்களை திருட டிரெய்னிங் கொடுத்த மிஸ்ராவை கைது செய்வதில் கவனத்தை திருப்பி உள்ளனர்.

கைதானவர்களில் ஒருவரான நீரஜ், மிஸ்ரா என்பவர் தான் தங்களுக்கு ஏடிஎம்மை கொள்ளையடிக்க பயிற்சி அளித்ததாக கூறியிருக்கிறார். மிஸ்ரா மீது ஐந்து வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. மிஸ்ரா குறித்து போலீசார் கூறும் போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மிஸ்ரா, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏடிஎம் இயந்திரத்தை 15 நிமிடத்தில் உடைப்பது எப்படி என்று உத்தரப்பிரதேச மாநிலம் சாப்ராவில் 3 மாத கோர்ஸ் நடத்தி கோச்சிங் சென்டர் நடத்தி வந்துள்ளார்.
ஏடிஎம்மில் எப்படி வேகமாக நுழைவது, ஏடிஎம் மையத்தின் கண்காணிப்பு கேமராக்களை எப்படி மறைப்பது, 15 நிமடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி பணத்தை எப்படி கொள்ளையடிப்பது போன்ற தொழில்நுட்ப அணுபவங்களை கற்றுக் கொடுத்துள்ளார். இந்த பயிற்சிக்கு பின் நேரடியாக ஏடிஎம் மையத்திற்கு சென்று செயல்முறை விளக்கத்தையும் மிஸ்ரா அளித்து வந்துள்ளார்.
இந்த வேலை, பணியை 15 நிமிடங்களுக்குள் அல்லது அதற்கும் குறைவாக முடிக்கும் உறுப்பினர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, ஏடிஎம்மை கொள்ளையடிக்க மிஸ்ரா அனுப்பி வைப்பாராம். அப்படித்தான் நீரஜ் மற்றும் 3 பேர் வந்துள்ளார்கள் என்று போலீசார் கூறினார்கள். இந்த ஏடிஎம் கோச்சிங் கும்பல் கடந்த ஒரு வருடத்தில் இதுபோன்ற 30க்கும் மேற்பட்ட சம்பவங்களை செய்திருக்கின்றன என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications