லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது லிஸ்ட்லயே இல்லயே.. சீனில் வந்த மாயாவதி.. மேஜர் அறிவிப்பை வெளியிட்டு.. டக்கென திரும்பும் பாஜக..!

எம்பி தேர்தலில் தனித்து போட்டி என்று மாயாவதி அதிரடியாக அறிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

லக்னோ: சமீபகாலமாக தேர்தல் களத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத நிலையில், ஒதுங்கியிருந்த மாயாவதி திடீரென சீனில் வந்துள்ளார்.. அத்துடன் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு, உபி மாநில கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

எம்பி தேர்தல் சூடுபிடித்துள்ளது.. தேசிய கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.. விட்டத்தை பிடிக்க காங்கிரசும், இருப்பதை தக்கவைக்க பாஜகவும் மும்முரமாகி வருகின்றன. அந்தந்த மாநில கட்சிகளும் வேகம் எடுத்து வருகின்றன.

அந்தவகையில், உத்தரபிரதேசமும் தன் மீதான கவனத்தை குவிக்க தொடங்கி உள்ளது.. இதில் மூத்த தலைவர் மாயாவதியும் களமிறங்குவது போல தெரிகிறது.

வேலைவெட்டி இல்லாமல் வெட்டியாக எதிர்க்கட்சிகள்.. பாஜக ஒரே போடு.. கொந்தளித்த மாயாவதி! வேலைவெட்டி இல்லாமல் வெட்டியாக எதிர்க்கட்சிகள்.. பாஜக ஒரே போடு.. கொந்தளித்த மாயாவதி!

 தலித் முகம்

தலித் முகம்

2007ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி அமைத்திருந்தது.. அந்தத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் 206 இடங்களில் அந்த கட்சி மகத்தான பெற்றி பெற்றிருந்தது.. அந்த தேர்தலின்போது, பிஎஸ்பியின் வெற்றிக்கு பின்னணியில் சமூக அளவில் நடந்த மாற்றங்களும் மிக மிக முக்கியமானதாக கருதப்பட்டது... காரணம், தலித் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியில், பிராமண வாக்காளர்களை தன்னுடைய பக்கம் ஈர்ப்பதில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றிருந்தது.. ஆனால், அதற்கு பிறகு, ஆட்சியில் இல்லாத நிலையிலும்கூட, அடுத்தடுத்து நடந்த தேர்தலில் மறுபடியும் பிராமண வாக்குகளை தன்னுடைய தங்கள் பக்கம் ஈர்ப்பதை இலக்காக கொண்டு வருகிறது பகுஜன் சமாஜ் கட்சி.

 ஸ்பெஷல் பேட்டி

ஸ்பெஷல் பேட்டி

இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. சமாஜ்வாதி கட்சியிலும்சரி, பாஜகவிலும்சரி, பிராமணர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு எதிரான தவறான நடத்தை காரணமாகவும், அச்சமூகத்தினரின் வாக்குகளை, தன்பக்கம் கவர முடியும் என்றும் பகுஜன் சமாஜ் நம்புவதாக தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்றைய தினம், பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவரும் தேசிய பொதுச் செயலாளருமான சதீஷ் சந்திர மிஸ்ரா பிபிசிக்கு ஒரு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அதில், மாநாடுகளை நடத்துவதன் மூலம் பிராமணர்களின் ஆதரவைப் பெற முடியும் என்று உங்கள் கட்சி நினைக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

 பிராமண சமுதாயம்

பிராமண சமுதாயம்

அதில் அவர் "பிராமண சமுதாயம் எல்லாவற்றையும் திறந்த கண்களால் பார்க்கிறது. அந்த சமூகத்தினர் எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். முன்பு பகுஜன் சமாஜ் அரசாங்கத்தில் அவர்களின் நிலை எப்படி இருந்தது, அவர்கள் எவ்வாறு வழிநடத்தப்பட்டார்கள் என அவர்கள் சிந்திக்கிறார்கள். பகுஜன் சமாஜ் ஆட்சிக்குப் பிறகு சமாஜ்வாதி ஆட்சியிலும் பாஜக ஆட்சியிலும் தங்களுடைய நிலை எப்படி உள்ளது என்பதை அவர்கள் பார்த்து வருகிறார்கள். அவர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக அவர்களை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துள்ளது. தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லிம் சமூகம் ஏற்கெனவே தங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பர்த்டே

பர்த்டே

இந்நிலையில், வரவிருக்கும் பல்வேறு மாநிலங்களின் சட்டசபை தேர்தல் மற்றும் எம்பி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக மாயாவதி அதிரடியாக அறிவித்துள்ளது, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. உபி மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தன்னுடைய 67 வது பிறந்தநாளை கொண்டாடினார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது, " நடந்து முடிந்த பல்வேறு தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி பல்வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது... அதில் கசப்பான அனுபவங்கள் உருவாகின..

 தனித்து போடி

தனித்து போடி

இதனை கருத்தில் கொண்டு அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் பல்வேறு மாநிலங்களின் சட்டசபை தேர்தல் மற்றும் 2024-ல் லோக்சபா தேர்தலிலும், பகுஜன் சமாஜ் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது... சில கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதாக தவறான கருத்தை வேண்டுமென்றே பரப்ப தொடங்கியுள்ளதால், கட்சியின் கொள்கையை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என்று மாயாவதி விளக்கம் தந்துள்ளார்.

 கசப்பு அனுபவம்

கசப்பு அனுபவம்

வரும் எம்பி தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகின்றன.. அனைவரும் ஓரணியில் திரள பாஜக அல்லாத மாநிலங்களில் மூத்த தலைவர்கள், மாபெரும் முயற்சியை எடுத்து வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது, கசப்பான அனுபவங்கள் உருவாகின என்பதால், தனித்து களமிறங்க போவதாக மாஅறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.. எனினும் தேர்தல் சமயத்திலும் இதே முடிவில் மாயாவதி உறுதியாக இருப்பரா என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது..!!

English summary
Huge Decision and BSP not to forge any alliance in assembly Legislative polls, says mayawati
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X