அதுக்கு வரலையே... மனைவியை கொன்ற கணவன் - ஆணுறுப்பையும் வெட்டிக்கொண்ட கொடூரம்
கூப்பிட்ட நேரத்தில் உறவுக்கு வர மறுத்த மனைவியை கொலை செய்த கணவன், தனது ஆணுறுப்பையும் வெட்டிக்கொண்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
லக்னோ: உடல் உறவுக்கு அழைத்த போது மனைவி மறுக்கவே வெறுப்படைந்த கணவன் கத்தியால் மனைவியை கொன்று விட்டு அதே கத்தியால் தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்டார். பதைபதைக்கும் இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
சித்தார்த்நகரை சேர்ந்தவர் அன்வருல் ஹாசன், இவருக்கும் இவருடைய மனைவி மெக்னஸ்சுக்கும் இடையே திருமணமாகி ஓராண்டு ஆகிறது. அன்வருலுக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் வேலை. புது மனைவியை சொந்த ஊரில் விட்டு விட்டு சூரத்திற்கு வேலைக்காக சென்றார். இரண்டு தினங்களுக்கு ஊருக்கு வந்த அவருக்குள் சைத்தான்தான் புகுந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டிய மனைவியை கொலை செய்யும் அளவிற்கு துணிந்திருக்க மாட்டார்.

சனிக்கிழமையன்று மெக்னசின் அலறல் சத்தம் கேட்டது. அன்வருல் சத்தமும் கேட்டது. அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அதில் மெக்னசின் உயிர் பிரிந்திருந்தது. அன்வருலின் ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தியதில் நடந்த சம்பவம் தெரியவந்தது.
சூரத்தில் இருந்து ஆசை ஆசையாக மனைவியைக் காண வந்த அன்வருல், படுக்கை அறையில் மனைவி இருந்த நிலை பதற்றத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் ஆசையோடு உறவுக்கு அழைத்தார். ஆனால் அதற்கு மனைவிக்கு விருப்பமில்லை. தான் அழைத்து வர மறுப்பதா என்று கோபப்பட்ட அன்வருல் கையில் கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தில் குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மனைவியைப் பார்த்தும் ரத்த வெறி அடங்கவில்லை. மனைவியே இல்லை அது இருந்து என்ன பிரயோஜனம் என்று யோசித்தாரோ என்னவோ உடனே தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்டார். அன்வருல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அதே நேரத்தில் தனது மகள் மெக்னசை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்து விட்டதாக அன்வருல் மீது அவருடைய மாமனார் புகார் அளித்திருக்கிறார். அந்த கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications