மனைவியின் கள்ளக்காதல்.. ஆத்திரத்தில் கொன்று வீட்டிலேயே புதைத்து.. 3 வருடங்களுக்கு பின் சிக்கிய கணவன்
மனைவி குழந்தைகளை கொன்று புதைத்த கணவனை போலீசார் கைது செய்தனர்
லக்னோ: 3 ஆண்டுகளுக்கு பிறகு, பெண் மற்றும் 2 குழந்தைகள் கொலை வழக்கில் திடீர் திருப்பம் நொய்டாவில் ஏற்பட்டுள்ளது..!
பிப்ரவரி 2018-ல் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பிஸ்ராக் போலீஸ் ஸ்டேஷனில் முதியவர் ஒருவர் புகார் கொண்டு வந்தார்..
அதில், தன்னுடைய 27 வயது மகளை காணவில்லை என்றும், 3 மற்றும் ஒரு வயதுடைய அவளுடைய குழந்தைகளையும் காணவில்லை என்று கூறியிருந்தார்.

பேரக்குழந்தைகள்
மேலும், தன்னுடைய மகள், மற்றும் பேரக்குழந்தைகளை மருமகன் ராகேஷ்தான் கடத்தியிருப்பார் என்றும், அவர்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.. அந்த புகாரின் அடிப்படையில், போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணையையும் ஆரம்பித்தனர்.. ஆனால் ராகேஷூம் போலீசாருக்கு சிக்கவில்லை.. அதனால் குடும்பமே காணாமல் போய்விட்டதாக நினைத்து தேட ஆரம்பித்தனர்..

திருப்பம்
அது சம்பந்தமாக அடுத்த 2 மாதத்திலேயே காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள டோல்னா போலீஸ் ஸ்டேஷனில் எப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டது.. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. சம்பந்தப்பட்ட ராகேஷ் உயிருடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்தனர்.

ஒப்புதல்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவி, மற்றும் குழந்தைகளை தான் தான் கடத்தி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.. மனைவிக்கு இன்னொருத்தருடன் கள்ளக்காதல் இருந்ததாகவும், அந்த ஆத்திரத்தில்தான் அவர்களை கொலை செய்து, சடலங்களை அவர்களின் வீட்டிலேயே குழிதோண்டி புதைத்ததாகவும் வாக்குமூலம் தந்தார்.. இதையடுத்து, ராகேஷ் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அந்த வீட்டின் அடித்தளத்தை போலீசார் தோண்டினர்..

விசாரணை
எலும்புக்கூடுகள் தென்பட்டன.. அவைகளை மீட்ட போலீசார் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.. அந்த ரிப்போர்ட் வந்தால்தான், எலும்புக்கூடுகளின் அடையாளங்களை முழுமையாக அறிய முடியும் என்று தெரிவித்துள்ளனர். இப்போது, ராகேஷ் கைதாகி உள்ளார்.. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 3 வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய மனைவி மற்றும்2 குழந்தைகளை கொன்று வீட்டிலேயே குழி தோண்டி புதைத்த கணவரின் பகீர் செயலால் நொய்டாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications