வயது வெறும் 17 தான்.. தங்கைனு கூட பாராமல் இளைஞர் செய்த கொடூர செயல்! ஆபாச படத்தால் பறிபோன உயிர்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆபாச வீடியோ பார்த்து தனது 17 வயது சகோதரியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த அண்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் 19 வயது இளைஞர். இவரது தந்தை கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துபோனார். இதையடுத்து அந்த இளைஞர் தனது தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். அவரது தங்கைக்கு 17 வயது ஆகிறது.

தந்தை இல்லாததால் அவரது குடும்பம் பொருளாதார ரீதியான பிரச்சனையை சந்திக்க தொடங்கி உள்ளது. இருப்பினும் அவர்கள் பிரச்சனையை சமாளித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்நிலையில் தான் கடந்த 3ம் தேதி அவரது தாய், உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார்.
இதனால் வீட்டில் அந்த இளைஞர் தனது தங்கையுடன் இருந்தார். அந்த சமயத்தில் இளைஞர் தனது செல்போனில் ஆபாச வீடியோக்கள் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர் தங்கையிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை விட்டு விலகி செல்ல முயன்றுள்ளார். ஆனால் விடாத இளைஞர் தங்கையை பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் மனம் உடைந்து கதறி அழுதுள்ளார். இந்த வேளையில் இளைஞர் பயந்துபோனார். அதோடு சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அவரது தங்கையும் பயந்துபோய் உள்ளார். ஆனாலும் இளைஞரின் மனதில் ஒரு பயம் இருந்துள்ளது. எங்கே தனது தாய் வீட்டுக்கு வந்தவுடன் தங்கை நடந்த சம்பவத்தை கூறிவிடுவாரோ என பயந்துள்ளார்.
இதனால் தங்கையை கொலை செய்ய முடிவு செய்துள்ளதோடு, அவரது கழுத்தை நெரித்து கொலையும் செய்துவிட்டு ஓடிவிட்டார். இதற்கிடையே உறவினர் வீட்டுக்கு சென்ற தாய் வீடு திரும்பியபோது தனது மகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரது உடலை பார்த்த கதறி அழுதார். அதோடு தனது மகன் வீட்டில் இருந்து மாயாகி உள்ளதால் அவன் தான் ஏதாவது தவறு செய்திருக்கலாம் என சந்தேகித்தார்.
இதுபற்றி போலீசில் உறவினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று தலைமைறவான இளைஞரை நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications