டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படும் அரசு திட்டங்கள்! மாஸ் காட்டும் யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அரசின் திட்டங்கள் அனைத்தும் இனி டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படும் என்று மாநில அரசு கூறியுள்ளது. இதன் மூலம் மாநிலம் விரைவில் டிஜிட்டல் மயமாகும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் அரசின் திட்டங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "உ.பி., மாநிலத்தில் குடும்ப அடையாள அட்டைக்காக பதிவு செய்யப்பட்ட அனைவரும், டெஸ்க்டாப் அல்லது மொபைல் ஃபோன் மூலம் டிஜிலாக்கரை பயன்படுத்தி தங்கள் குடும்ப ஐடியை அணுக முடியும். அதேபோல போலி பயனாளிகளை எளிதாக அடையாளம் கண்டு நீக்க முடியும். அதேபோல நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது எளிதாக்கப்படும். இதில் அரசின் திட்டங்கள் குறித்து முழுமையான தகவல்கள் இருக்கும். இதனை பயன்படுத்துவது தொடர்பாக விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
உத்தரப் பிரதேசம் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் டிஜிட்டல் மயமாக்கல் என்பது முக்கியமாகும். எனவேதான் மாநில அரசு இதனை அமல்படுத்த தீவிரமாக முயன்று வருகிறது. இது நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு பலன்களை கொடுக்கும்" என்று கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications