லக்கிம்பூர் கொலை.. காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ்.. போலீசிடம் உளறிய ஆஷிஷ் மிஸ்ரா- கைது செய்யப்பட்டது எப்படி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவழியாக மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று போலீசாரிடம் இவர் விசாரணையின் போது உளறியதே போலீசார் இவரை கைது செய்ய காரணம் என்று கூறப்படுகிறது.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இங்கு நடந்த விவசாய போராட்டத்தின் போது விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையில் நடந்த மோதலில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆஷிஷ் மிஸ்ராவின் ஜீப் விவசாயிகள் மீது ஏறியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளியாகி இருந்தன. இன்னும் சிலர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

கொலை வழக்கு

கொலை வழக்கு

ஆஷிஸ் மீது தற்போது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் இவரை கைது செய்யாமல் மெத்தனம் காட்டி வந்தனர். இவரை கைது செய்யாமல் போலீசார் தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தனர். இதையடுத்து ஆஷிஷ் மிஸ்ராவை ஏன் கைது செய்யவில்லை என்று போலீசாரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இவரை கைது செய்வதில் மெத்தனம் காட்டுவது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் வைத்து இருந்தது.

விமர்சனம்

விமர்சனம்

இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜாராகாமல் ஆஷிஷ் மிஸ்ரா தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு நேற்று காலை வரை விசாரணைக்கு ஆஜராக நேரம் கொடுக்கப்பட்டது. இல்லையென்றால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் நேற்று ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜரானார். நீண்ட விசாரணைக்கு பின் நேற்று இரவு ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.

கைது காரணம்

கைது காரணம்

லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவழியாக மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். முதல் விஷயம் விவசாயிகள் ஜீப் ஏற்றி கொலை செய்யப்பட்ட போது தான் எங்கே இருந்தேன் என்பதை ஆஷிஷ் மிஸ்ராவால் சரியாக சொல்ல முடியவில்லை. மாற்றி மாற்றி பேசி இருக்கிறார். முதலில் மல்யுத்த விழா ஒன்றில் இருந்ததாக கூறியுள்ளார்.

 மல்யுத்தம்

மல்யுத்தம்

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 6 கிமீ தூரத்தில் உள்ள மல்யுத்த விழாவில் இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் அந்த விழாவில் காவலுக்கு இருந்த போலீஸ் அதிகாரிகள், பொது மக்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆஷிஷ் மிஸ்ரா அங்கே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதைப்பற்றியும் ஆஷிஷ் மிஸ்ராவிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. அதோடு ஆஷிஷ் மிஸ்ராவின் போன் லோகேஷன் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில்தான் அந்த நேரத்தில் இருந்துள்ளது.

கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்பு

இதனால் அவர் சம்பவம் நடந்த இடத்தில்தான் இருந்தார் என்று சந்தேகிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கு காரணம் சொன்ன ஆஷிஷ் மிஸ்ரா, நான் அப்போது அருகில் இருந்த மில் ஒன்றில் இருந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அங்கும் விசாரித்ததில் மில்லுக்கு ஆஷிஷ் மிஸ்ரா அப்போது வரவில்லை என்று கூறப்படுகிறது. தனது இருப்பிடம் குறித்து இப்படி மாறி மாறி ஆஷிஷ் மிஸ்ரா இரண்டு முறை பேசி உள்ளார்.

ஆதாரம்

ஆதாரம்

மூன்றாவதாக அந்த ஜீப்பை ஓட்டி விவசாயிகள் மீது ஏற்றியது ஜீப் டிரைவர் ஹரி ஓம் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் மஞ்சள் நிற உடை அணிந்து இருந்தார். ஆனால் வீடியோ காட்சிகளின்படி ஜீப்பை ஓட்டியது வெள்ளை நிற குர்தா அணிந்து இருந்த நபர். ஆஷிஷ் மிஸ்ராதான் வெள்ளை நிற குர்தா அணிந்து இருந்தார். இந்த வீடியோ ஆதாரமும் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு எதிராக இருந்தது.

கைது

கைது

இந்த மூன்று முக்கியமான ஆதாரங்கள் ஆஷிஷ் மிஸ்ராவின் கைதுக்கு காரணமாக அமைந்தது. ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. இவரை கடந்த 5 நாட்களாக தேடி சம்மன் அனுப்பி அதன்பின் கைது செய்துள்ளனர். பொதுவாக கொலை வழக்கில் உடனே கைதுகள் நடக்கும். ஆனால் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு சம்மன் எல்லாம் அனுப்பி 5 நாட்கள் கழித்துதான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+