கொடுமை.. சாப்பாடு இல்லை.. 5 குழந்தைகளையும் கங்கையில் தூக்கி வீசிய தாய்.. குடும்ப தகராறு காரணமா?
உணவில்லாத விரக்தியில் 5 குழந்தைகளை கங்கையில் தள்ளியுள்ளார் ஒரு தாய்
லக்னோ: மஞ்சுவுக்கும் - அவரது கணவருக்கும் தகராறு.. தம்பதிக்குள் நடந்த இந்த சண்டையில் ஆத்திரமடைந்த மஞ்சு, பெற்ற குழந்தைகள் 5 பேரையும் கங்கை நதியில் தூக்கி வீசிவிட்டார்... இந்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது!!
உபி மாநிலம் பாதோகி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஜஹாங்கிராபாத் பகுதியில் வசித்து வரும் தம்பதி மஞ்சு - மிருதுள் யாதவ்.. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

ஆனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டையும் தகராறும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி சம்பவத்தன்றும் வீட்டில் பிரச்சனை வெடித்துள்ளது... இந்த பிரச்சனை கைகலப்பு வரையும் சென்றுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு 3 பெண் குழந்தைகள் உட்பட தன்னுடைய 5 குழந்தைகளையும் கங்கை நதிக்கு அழைத்து சென்று நீரில் மூழ்கடித்தார்... தனது 5 குழந்தைகளையும் கங்கையில் வீசியபிறகு பிறகு, கரையிலேயே உட்கார்ந்து மஞ்சு அழுது கொண்டிருந்துள்ளார்.
விடிந்ததும் அந்த பகுதியாக வந்த கிராம மக்கள், மஞ்சுவிடம் என்ன ஏதென்று கேட்கவும் நடந்ததை சொல்லி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் சொல்லி உள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கங்கை நதியில் மூழ்கிய குழந்தைகளை தீயணைப்பு படையினர் உதவியுடன் தேடி வருகிறார்கள்.
ஆர்த்தி 12 வயது, சரஸ்வதி 10 வயது ஆகியோரின் உடல்கள் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.. மாதேஸ்வரி, ஷிவ்ஷங்கர், கேஷவ் பிசாத் ஆகியோரின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குழந்தைகளை தள்ளிவிடப்பட்ட இடம் ரொம்பவும் ஆழமான பகுதி என்பதால், உடல்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது
Recommended Video
சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.. தொடர் விசாரணையும் மஞ்சுவிடம் நடந்து வருகிறது. இந்த பெண் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். தினக்கூலி செய்துதான் குழந்தைகளை காப்பாற்றி வந்துள்ளனர்.. ஆனால் கணவனுடன் நடந்த சண்டையில் ஏதும் அறியாத 5 குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொன்ற இந்த கொடூர சம்பவம் மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது!!












Click it and Unblock the Notifications