லோக்சபா தேர்தலுக்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கேவின் பதவி பறிபோகும்.. அமித்ஷா தாக்கு
லக்னோ: தேர்தலுக்கு பிறகு மல்லிகார்ஜுன கார்கேவின் பதவி பறிபோகும் என்றும், தோல்விக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி குறை சொல்ல மாட்டார்கள் எனவும் தேர்தல் பிரசாரம் செய்த அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இவிஎம் மிஷினால் தான் நாங்கள் தோற்றோம் என்று காங்கிரஸ் கூறும் என அமித்ஷா பேசினார்.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட தேர்தல்கள் இதுவரை நடந்து முடிந்துள்ளது. அதாவது, 488 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் இதுவரை நடைபெற்றுள்ளது.

லோக்சபா தேர்தல்: இன்னும் ஒரு கட்ட தேர்தல் மட்டுமே பாக்கியுள்ளதால் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதே வேளையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக வியூகம் வருகிறது.
அமித்ஷா பிரசாரம்: தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் கார்கே, வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்லியா மற்றும் சந்தவுலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
கார்கே பதவி பறிபோகும்: அப்போது பேசிய அமித்ஷா, ''தேர்தலுக்கு பிறகு மல்லிகார்ஜுனா கார்கேவின் பதவி பறிபோகும் என்றும் தோல்விக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி குறை சொல்ல மாட்டாரக்ள் எனவும் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தேர்தலுக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பை ராகுல் காந்தி தரப்பினர் நடத்துவார்கள்.. இவிஎம் மெஷினால்தான் நாங்கள் தோல்வி அடிந்தோம் என்று கூறுவார்கள்" என்றார்.
ஒரு நாள் கூட லீவு இல்லை: மேலும் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சியை சாடிய அமித்ஷா, "பிரதமர் மோடி ஏழ்மை நிலையில் பிறந்தார். ஆனால், ராகுல் மற்றும் அகிலேஷ் யாதவ் சில்வர் ஸ்பூனுடன் பிறந்தவர்கள். எளிய மக்களின் பிரச்சினைகள் அவர்களுக்கு தெரியாது. இந்தியாவின் தட்ப வெப்ப நிலை அவர்களுக்கு பிடிக்காது. ராகுல் காந்தி ஒவ்வொரு ஆறு மாதத்திறுகும் ஒருமுறையும் தாய்லாந்து செல்கிறார்.
மோடி மீது ஒரு ஊழல் கூட இல்லை: புர்வஞ்சல் பகுதியின் வெப்பத்தை அவர்களால் தாங்க முடியாது. பிரதமர் மோடி தனது ஆட்சி காலத்தில் ஒரு நாள் கூட லீவ் எடுத்தது இல்லை. பிரதமர் மோடிக்கு எதிராக இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட வைத்தது இல்லை. ஆனால், ராகுல் மற்றும் அகிலேஷ் மீது 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் புகார் உள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா?












Click it and Unblock the Notifications