ஐபோன் வாங்க பணமில்லை.. கேஷ் ஆன் டெலிவரியில் ஆர்டர் போட்டு.. டெலிவரி ஏஜெண்டை கொலை செய்த இளைஞர்! பகீர்
லக்னோ: எப்போதும் நமது வரவுக்கு ஏற்ற செலவு இருக்க வேண்டும். வருமானத்தை மீறிய பொருட்களை ஆசைப்பட்டு வாங்கிவிட்டால் அது நமக்குச் சிக்கலையே தரும். அப்படிதான் விலை உயர்ந்த செல்போனை ஆர்டர் செய்த இருவர், பணம் கொடுக்க முடியாமல் டெலிவரி ஏஜெண்டை கொலை செய்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.
இப்போது விலையுயர்ந்த செல்போனை ஆர்டர் செய்யப் பலரும் ஆசைப்படுகிறார்கள். அதிலும் மிடில் கிளாஸ் இளைஞர்கள் பலரும் வருமானத்திற்கு மீறி ஆடம்பர செல்போன்களை வாங்குகிறார்கள்.

இதற்குப் பல நேரங்களில் குடும்பத்தினரிடம் இருந்தே பணத்தைப் பிடுங்குகிறார்கள். சில நேரம் அவை குற்றச் செயல்களிலும் சென்று முடிந்துவிடுகிறது. அப்படியொரு கொடூர சம்பவம் தான் இப்போது உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்துள்ளது.
கொலை: அங்கு ஒருவர் கேஷ் ஆன் டெலிவரியில் ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐபோனை டெலிவரி கொடுக்க 30 வயதான டெலிவரி நபரை இருவர் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். ரூ. 1.5 லட்சம் ஐபோன் மொபைலுக்காக டெலிவரி ஏஜெண்ட் பரிதாபமாகக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனை பறித்துக் கொண்டு டெலிவரி ஏஜெண்ட்டை கொலை செய்த அவர்கள், உடலை அருகே உள்ள கால்வாயில் வீசிவிட்டனர். மாநில பேரிடர் மீட்புப் படையின் உதவியுடன் இப்போது அந்த டெலிவரி ஏஜெண்டின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: இது தொடர்பாகத் துணை போலீஸ் கமிஷனர் ஷஷாங்க் சிங் கூறுகையில், "சின்ஹாட்டைச் சேர்ந்த கஜனன் என்பவர் ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் இருந்து சுமார் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான ஐபோனை கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்துள்ளார். கடந்த செப். 23ம் தேதி இந்த ஆர்டரை டெலிவரி செய்த பாரத் சாஹு என்பவர் சென்றுள்ளார்.
அப்போது மொபைலை ஆர்டர் செய்த கஜானன் மற்றும் அவனது கூட்டாளி ஆகாஷ் என்பவருடன் இணைந்து பாரத்தை கொலை செய்துவிட்டனர். பாரத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பிறகு அவரது உடலை ஒரு சாக்குப் பையில் போட்டு அருகே உள்ள இந்திரா கால்வாயில் வீசியுள்ளனர்" என்றார்.
புகார்: பாரத் அன்றைய தினம் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அஞ்சியுள்ளனர். போன் மூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இருப்பினும், நண்பர்கள் வீட்டிற்குச் சென்றிருப்பார் என்று விட்டுவிட்டனர். மறுநாளும் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அவர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். நண்பர்களிடமும் கேட்டுள்ளனர்.
யாருக்கும் பாரத் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் போன நிலையில், அவரது குடும்பத்தினர் கடந்த செப்டம்பர் 25ம் தேதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பாரத்தின் மொபைல் போன் டவர் விவரங்களைச் சேகரித்த அவர் கடைசியாகச் சென்ற இடத்தை கண்டுபிடித்தனர். போலீசார் கஜனனின் எண்ணைக் கண்டுபிடித்து, அதை டிராக் செய்துள்ளனர்.
சுற்றி வளைத்த போலீஸ்: இருப்பினும், அதற்குள் கஜனன் உஷாராகி தப்பிவிட்டார். அதேநேரம் கஜனனின் நண்பர் ஆகாஷை போலீசார் பிடித்துவிட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஆகாஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இப்போது தலைமறைவாக உள்ள கஜனனின் உடலை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலும், இந்திரா நகரில் தூக்கி வீசப்பட்ட பாரத் உடலைப் பேரிடர் மீட்பு படை உதவியுடன் போலீசார் தேடி வருகிறார்கள். இருப்பினும், இதுவரை உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை விரைவில் தீவிரப்படுத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications