இவரெல்லாம் ஒரு பெரியப்பாவா.. என்ன காரியம் செய்திருக்கிறார் பாருங்க.. அதுவும் 10 வயது சிறுவனை.. கொடுமை
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்ட நிலையில் பல பகீர் சம்பவங்கள் வெளிவந்துள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பக்ரைச் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பர்சா கிராமத்தில் கிருஷ்ண வர்மா எனும் விவசாயி வாழ்ந்து வருகிறார். இவர் விவசாயம் செய்தாலும், இவருக்கென சொந்தமாக நிலங்கள் எதுவும் கிடையாது. கூலி விவசாயியான இவர் அன்றாடம் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். வேளாண் தொழில் 365 நாட்களும் கிடைக்காது எனவே, இந்த தொழில் இல்லாத காலங்களில் வெளி ஊரில் சென்று கூலி வேலை செய்து குடும்பத்தை பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி இவர் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது இவரது 10 வயது மகன் விவேக்கை காணவில்லை. சரி எங்காவது விளையாட சென்றிருப்பார் என நினைத்து தேடாமல் விட்டுவிட்டார். ஆனால் இரவு ஆகியும் கூட விவேக் வீடு திரும்பவில்லை. எனவே இரவு முழுவதும் அவனை தேடி திரிந்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அடுத்த நாள் காலை கிருஷ்ண வர்மா வீட்டருகே இருந்த வயல்வெளியில் சிறுவன் விவேக் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனை
சிறுவனின் கழுத்து அறுக்கப்பட்டிருந்த நிலையில், காட்டு விலங்குகள் ஏதும் தாக்கியிருக்கும் என்று ஊர் மக்கள் கூறியிருந்தனர். ஆனால் கிருஷ்ண வர்மாவால் இதனை ஏற்க முடியவில்லை. எனவே காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சடலத்தை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல சடலமும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுவனின் உடலில் உள்ள காயங்கள் காட்டு விலங்குகள் தாக்கியதால் ஏற்பட்டதல்ல என்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது ஆயுதங்கள் கொண்டே சிறுவன் தாக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

விசாரணை
இதனையடுத்து சந்தேக நபர்கள் மீது காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டது. முதற்கட்டமாக கிருஷ்ண வர்மாவின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் உயிரிழந்த சிறுவனின் பெரியப்பாவான அனுப் எனும் நபர் மட்டும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியுள்ளார். இதனை கவனித்த காவல்துறை தனது முழு விசாரணையை இவர் பக்கம் திருப்பியது. ஆனால் அனுப் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை. எனவே அனுப்பை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தனது பாணியில் காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. அப்போது அனுப் கூறிய தகவல்கள் போலீசுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நரபலி
அதாவது அனுப்-க்கு இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. ஆனால் இந்த குழந்தைக்கு சமீப நாட்காக சரியாக பேச வரவில்லை. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருக்கிறது. இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார் அனுப். ஆனால் எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. மருத்துவ அறிக்கைகள் குழுந்தை மனநலன் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளது. எனவே அனுப் மருத்துவமனைகளை நாடாமல் தனது கிராமத்தில் இருந்த மந்திரவாதியை நாடியிருக்கிறார். மந்திரவாதியை நாடியபோது, "குழந்தையின் உடல்நிலை சரியாக வேண்டும் எனில் நரபலி கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

கைது
அதேபோல நரபலி கொடுக்கப்படும் நபர் சிறுவனாக இருக்க வேண்டும் என்றும், அப்போதுதான் குழந்தையின் உடல் நிலையில் சீக்கிரம் முன்னேற்றம் தெரியும் எனவும் மந்திரவாதி கூறியுள்ளார். இதனையடுத்துதான் அனுப் தனது சொந்தக்காரரான கிருஷ்ண வர்மாவின் 10 வயது குழந்தையை குறி வைத்திருகிறார். இதனையடுத்து அக்குழந்தையை ஆள் வைத்து கடத்தி மண்வெட்டி கொண்டு சிறுவனை கொடூரமான முறையில் தான் கொலை செய்துள்ளதாக அனுப் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications