"4 பேரும் சாகப்போறோம்!" சொன்ன மறுநொடி அதிபயங்கர வேகத்தில் லாரியில் மோதிய சொகுசு கார்! ஷாக் வீடியோ
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த கொடூர விபத்து ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் அதிவேகமாக வாகனங்களை இயங்குவதால் தொடர்ச்சியாக பல்வேறு விபத்துகள் அரங்கேறி வருகிறது. இதனால் பல நூறு பேர் கொடூரமாகப் பலியாகும் சூழலும் உருவாகி உள்ளது.
வாகனங்களை அதிவேகமாக இயக்கக்கூடாது என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் போதிலும், இளைஞர்கள் அதை கேட்பதாகத் தெரியவில்லை. இதனால் கொடூர விபத்துகள் அரங்கேறி வருகிறது.

மோசமான விபத்து
அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் உத்தரப் பிரதேசத்தில் நடந்து உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டது. இதில் சுமார் 200 கிமீ வேகத்தில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று லாரி மீது மோதி கொடூர விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த விபத்து ஏற்படும் சில நொடிகள் முன்பு எடுக்கப்பட்ட பேஸ்புக் லைவ் வீடியோ இப்புத இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

300 கிமீ வேகம்
அந்த வீடியோவில் சொகுசு கார் மணிக்கு அதிவேகமாகச் செல்வது செல்வது தெளிவாகத் தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்து உள்ளது. அப்போது அதிவேகமாக வந்த சொகுசு கார் மணிக்கு 300 கிமீ வேகத்தில் எதிர்புறத்தில் இருந்து வந்த ஒரு கண்டெய்னர் லாரி மீது மோதியது.. இந்த விபத்தில் சொகுசு கார் உள்ளே இருந்த நான்கு பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்கள் உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூரில் இருந்து டெல்லி சென்றதாகக் கூறப்படுகிறது.

நம்ம அவ்வளவு தான்
கார் விபத்து ஏற்படுவதற்கு சில நொடிகள் முன்பு, டிரைவர் சீட் அருகே இருந்த பயணி இந்த வீடியோ எடுத்துள்ளார். அதில் கார் மணிக்கு 230 கிமீ வேகத்தைத் தாண்டி செல்வது பதிவாகி உள்ளது. மேலும், அப்போது வீடியோ எடுக்கும் நபர், "நம்ம நான்கு பேரும் கண்டிப்பாகச் சாகப் போகிறோம்" என்று கூறுகிறார். அவர் அப்படிச் சொல்லி சில நொடிகளில் இந்த விபத்து ஏற்பட்டு நான்கு பேரும் உயிரிழந்து உள்ளனர்.

என்ன நடந்தது
அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த 35 வயதான டாக்டர் ஆனந்த் பிரகாஷ் என்பவர் காரை இயக்கி உள்ளார். சாலையில் நீண்ட தூரத்திற்கு யாருமே இல்லாததைக் கண்ட ஆனந்த் பிரகாஷ், "அனைவரும் சீட் பெல்டை டைட் செய்து கொள்ளுங்கள்.. மின்னல் வேகத்தில் பறக்கப் போகிறோம்" என்று கூறுகிறார். விபத்து நடந்த போது இவர்கள் மது போதையில் இருந்தனரா என்பது குறித்த தகவல்கள் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை.

பறந்த என்ஜின்
லாரி மீது அதிவேகமாக வந்த அந்த சொகுசு கார் மோதி ஏற்பட்ட விபத்து மிக மோசமானதாக இருந்து உள்ளது. காரில் பயணித்த நான்கு பேர் மட்டுமின்றி, காரின் என்ஜினும் கூட தனியாகப் பெயர்ந்து தூரத்தில் தூக்கிவீசப்பட்டு உள்ளது. இது தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

விசாரணை
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஆனந்த் பிரகாஷ், ரியல் எஸ்டேட் அதிபர் அகிலேஷ் சிங், பொறியாளர் தீபக் குமார் மற்றும் தொழிலதிபர் முகேஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த அனைவருமே 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆகும். அதேபோல தலைமறைவாக உள்ள லாரி டிரைவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications