5 குழந்தைகளும் பெண்.. 6வது என்ன பொறக்கும்.. மனைவி வயிற்றைக் கிழித்துப் பார்த்த கொடூர கணவன்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒருவருக்கு தொடர்ந்து 5 குழந்தைகளும் பெண் குழந்தைகள் என்பதால் 6ஆவதாக பிறக்க போகும் குழந்தை ஆணா, பெண்ணா என பார்க்க மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

இந்த நிலையில் அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வயிற்றுக்குள் இருந்த ஆண் குழந்தை பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

லக்னோவை அடுத்த பாதான் நகரைச் சேர்ந்தவருக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தனக்கு ஆண் குழந்தை வேண்டி, அடுத்தடுத்து மனைவியை கர்ப்பமாக்கியதால் தொடர்ந்து 5 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்த நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தனது மனைவியை மீண்டும் கர்ப்பமாக்கியுள்ளார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக அவர் உள்ளார்.

6ஆவது குழந்தை

6ஆவது குழந்தை

அந்த இளைஞருக்கு பிறக்க போகும் 6ஆவது குழந்தையும் பெண் குழந்தையாக இருந்துவிட்டால் என்ன செய்வது என குழப்பத்தில் இருந்தாராம். இந்த நிலையில் மருத்துவமனைகளில் குழந்தையின் பாலினத்தை அறிய தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் மூர்க்கத்தனமாக யோசித்தார்.

அலறல் சப்தம்

அலறல் சப்தம்

அதன்படி தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியின் வயிற்றை கத்தியால் வெட்டியுள்ளார். இதையடுத்து இந்த பெண்ணின் அலறல் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ள அவரது சிசு இந்த உலகை பார்ப்பதற்கு முன்னர் வயிற்றிலேயே இறந்துவிட்டது. அந்த குழந்தை ஆண் சிசு என மருத்துவர்கள் அறிவித்தார்கள்.

இளைஞர் கைது

இளைஞர் கைது

இதுகுறித்து அந்த பெண்ணின் சகோதரர் கோலு சிங் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண் குழந்தைகள் என்றால் சுமையாகவே கருதும் காலம் இந்த நூற்றாண்டிலும் நடப்பது வேதனை அளிக்கிறது. பெண் குழந்தைகள் என்றால் செலவு, ஆண் குழந்தைகள் என்றால் வரவு என சில பெற்றோர்கள் கருதுகிறார்கள்.

பெண்ணோ

பெண்ணோ

ஆணோ, பெண்ணோ எதுவாக இருந்தாலும் அது கடவுள் அளித்த வரம் என நினைப்பவர்கள் வெகு சிலரே. கடந்த 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் 1000 ஆண் குழந்தைகள் பிறந்தால் 896 பெண் குழந்தைகள் பிறக்கின்றன. அது போல் 2014-2016-இல் இது 898 ஆகவும், 2013-2015-இல் இது 900 மாகவும் இருந்துள்ளது. இது போல் பெண் சிசுவின் கருவை கலைப்பதால் இந்தியாவில் குழந்தை ஆணா, பெண்ணா என சோதனை மூலம் அறிவிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இப்படியும் சில கொடூரர்களும் கிறுக்கர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+