லக்னோவில் அப்படியே சரிந்த கட்டடம்.. உள்ளே சிக்கிய 35 பேர் கதி என்ன? பூகம்பத்திற்கு பின் ஷாக் சம்பவம்
லக்னோ: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென சரிந்து விழுந்து மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலர் உயிரிழக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சமீப காலமாக நிலநடுக்கம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் புத்தாண்டு தினத்தில் தான் அங்குச் சற்று நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.
இதனிடையே இன்று பிற்பகலில் அங்கு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8ஆக இருந்த இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லி மட்டுமின்றி உத்தரப் பிரதேசத்திலும் சில பகுதிகளில் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கட்டிட விபத்து
இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று மாலை உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென சரிந்து விழுந்து மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

மூவர் பலி
இதுவரை இந்த விபத்தில் சிக்கிய மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், பலர் அங்கு உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தற்போது மீட்கப்பட்ட அனைவரும் மயக்கமடைந்த நிலையிலேயே இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

உள்ளே சிக்கிய 35 பேர்
இது குறித்த தகவல் கிடைத்தவுடன் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இது குறித்து உத்தரப் பிரதேச டிஜிபி கூறுகையில், "இதுவரை 5 பேரை உயிருடன் மீட்டுள்ளோம். அவர்கள் அனைவரும் அதிர்ச்சி இருந்தனர். அவர்களைச் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.. கட்டிடம் இடிந்து விழும் போது இதில் 8 குடும்பத்தினர் இருந்துள்ளனர். உள்ளே 30 முதல் 35 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அஞ்சுகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து அதிகாரிகள்
தற்போது நடந்து வரும் மீட்புப் பணிகளை முதல்வர் யோகி ஆத்தியநாத் நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் சம்பவ உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். ஹஸ்ரத்கஞ்ச் பழமையான கட்டிடங்களால் நிறைந்த ஒரு பகுதியாகும்.. அங்கு தான் இப்போது இந்த விபத்து நடந்துள்ளது.

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்
இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் படையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மருத்துவமனைகளில் அவர்களுக்கு உரியச் சிகிச்சை கிடையேது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகள் காயமடைந்தவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications