Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்து, முஸ்லீம் என இருதரப்பையும் பாதித்த மாமிச தடை.. ஆதித்யநாத் உத்தரவால் கலங்கும் கடை உரிமையாளர்கள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மதுரா மற்றும் அதை சுற்றி உள்ள நகரங்களில் போடப்பட்டு இருக்கும் மாமிச தடை காரணமாக மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இஸ்லாமியர்கள் என்று இல்லாமல் இந்துக்கள், இதை நம்பி ஹோட்டல் நடத்தி வந்தவர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் இந்த விதிமுறை பாதித்து உள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் மதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள புனித தலங்கள் என்று அறிவிக்கப்பட்ட ஏழு ஊர்களில் மது, மாமிசம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுராவில் முன்பே இந்த தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் நந்த்காவ்ன், பர்ஸானா, கோலம், பிருந்தாவன், கோவர்தன், பல்தேவ், மாஹாவன் ஆகிய ஊர்களிலும் இதே தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏழு ஊர்களும் உத்தர பிரதேசத்தில முதல்வர் ஆதித்யநாத் மூலம் புனித தளங்கள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் ஆகும். மதுரா - பிருந்தாவன் பகுதியில் மட்டும் மொத்தம் 22 வார்டுகளில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அவதி

மக்கள் அவதி

இந்த திடீர் தடை காரணமாக இங்கு மாமிச கடைகள், அந்த கடைகளை நம்பி தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த ஹோட்டல்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் அடங்கும் வார்டுகளில் இருக்கும் மாமிச கடைகள் எல்லாம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. பல வருடமாக இங்கே கடைகள் ஹோட்டல்கள் நடத்தி வந்தவர்கள் அனைத்தையும் மூடிவிட்டு இங்கிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மொத்தமாக பல கடைகள் மூடப்படும் நிலைக்கு சென்றுள்ளன.

தொடங்கிவிட்டது

தொடங்கிவிட்டது

இங்கு தற்போது மதுரா மாநகராட்சி நிர்வாகிகளும் மற்ற பகுதிகளை, நகராட்சி, ஊராட்சி நிர்வாகிகளும் சர்வே செய்து வருகிறார்கள். எந்தெந்த பகுதிகளுக்குள் மாமிச கடைகள் வைக்கப்பட கூடாது. எந்த எல்லைக்கு வெளியே கடைகள் வைக்கலாம் என்று வரையறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான அங்கு மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். இந்த சர்வே வரையறை எல்லைக்கு உள்ளே வந்தால் கடைகளை காலி செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட எல்லைக்கு வெளியே இருந்தால் கடைகளை தொடர்ந்து நடத்தலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் சில கடைகள் இந்த தடையில் இருந்து தப்பித்துள்ளது. பல கடைகள் சிக்கி உள்ளது.

4 லட்சம் பேர் குழப்பம்

4 லட்சம் பேர் குழப்பம்

இந்த பகுதியில் மொத்தம் 4 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இதில் மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் 22 வார்டுகளில் மாமிசம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு அதிகமாக இஸ்லாமியர்கள், தலித் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் ஹோட்டல் மற்றும் மாமிச கடைகளை நம்பியே வசிக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் இப்போது இங்கே மொத்தமாக பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் சோகம்

மக்கள் சோகம்

அப்பகுதி மக்களிடையே இது கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் கடை கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே வருகிறதா அல்லது உள்ளே வருகிறதா என்று தெரியவில்லை. எப்போது எங்கள் கடையை மூடுவார்கள் என்ற அச்சம் உள்ளது. எங்கள் கடைகள் கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே இருந்தாலும் கூட தொடர்ந்து இங்கே கடைகளை நடத்துவது பாதுகாப்பு கிடையாது. இங்கே நாங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மாமிச கடைகள் மற்றும் ஹோட்டல்கள் நடத்தும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அடிப்படை உரிமை

அடிப்படை உரிமை

அதோடு இங்கு ஹோட்டல் மற்றும் மாமிச கடைகள் நடத்தும் சங்கத்தினர், இது அடிப்படை உரிமை மீறல் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்திய அடிப்படை உரிமை சட்டங்களான 19 மற்றும் 21க்கு எதிரான விதி இது. உத்தர பிரதேச அரசு 2017லேயே மாமிசங்களை வெட்ட தடை விதிக்க முயன்றது. அப்போது இதற்கு அலஹாபாத் உயர் நீதிமன்றம் இதை தடுத்து நிறுத்தியது. அதோடு எந்த வகையிலும் மக்களின் அடிப்படை உரிமையில் தலையிட கூடாது என்று உத்தரவிட்டது. அதை மீறி இப்போது உத்தர பிரதேசத்தில் பாஜக அரசு செயல்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளனர்.

மக்கள் வெளியே செல்கிறார்கள்

மக்கள் வெளியே செல்கிறார்கள்

இதனால் அங்கு கடை வைத்திருக்கும் பலர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பொருளாதார ரீதியாக பாதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரா டவுன் பகுதியில் மட்டும் மொத்தம் 38 கடைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இஸ்லாமியர்களை மட்டுமல்ல இந்துக்களையும் பாதிப்பதாக அங்கு கடை நடத்தும் பலர் தெரிவித்துள்ளனர். மதுராவில் கடை நடத்தும் ராஜ் குமார் என்ற நபர், நான் டெல்லி சிக்கன் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறேன்.

இந்து முஸ்லீம்

இந்து முஸ்லீம்

இந்த உத்தரவால் மொத்தமாக கடைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. பல வருடமாக நான் இங்கே கடை நடத்தி வந்தேன். அருகில் இருந்த பலரும் என் கடைக்கு வருவார்கள். இந்த உத்தரவு இந்துக்கள் இஸ்லாமியர்கள் என்று எல்லோரையும் பாதித்து உள்ளது. இஸ்லாமியர்கள் மட்டும் இல்லை. மாமிச விற்பனையை நம்பி இருந்த பல இந்துக்களின் ஹோட்டல்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட நாங்கள் இப்போது மேலும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறோம்.

கடைகள்

கடைகள்

இங்கே வேலைக்கு வந்த வெளிமாவட்ட ஆட்கள் பலர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களை பொருளாதார ரீதியாக இந்த அறிவிப்பு நசுக்கி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் இங்கு மாமிசம் விற்று வந்தவர்கள், ஹோட்டல் நடத்தியவர்களை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் வேறு வருமானத்திற்கு வகை செய்ய முதல்வர் ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர் விரைவில் உதவிகளை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+