இனி நோ ரெஸ்ட்.. உ.பியில் 16 மணி நேரம் தொடர்ச்சியாக நடந்த ஆலோசனை.. கடுமையாக உழைக்கும் பிரியங்கா!
நேற்று உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தொடர்ச்சியாக 16 மணி நேரம் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் உத்தர பிரதேசத்தில் ஆலோசனை நடத்தினார்.
Recommended Video

லக்னோ: நேற்று உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தொடர்ச்சியாக 16 மணி நேரம் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் உத்தர பிரதேசத்தில் ஆலோசனை நடத்தினார். இன்று அதிகாலை 5.30 மணி வரை இந்த ஆலோசனை நடந்து இருக்கிறது.
உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முதல்நாள் மிக பெரிய பேரணியுடன் உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி தனது தேர்தல் பணிகளை தொடங்கினார்.
தேர்தலை முன்னிட்டு பிரியங்கா காந்தி பல முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளை உத்தர பிரதேசத்தில் சந்தித்து ஆலோசித்து வருகிறார். நாளை வரை இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

16 மணி நேரம்
மொத்தம் 16 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்து இருக்கிறது. நேற்று மதியம் 1.30 மணிக்கு பிரியங்கா காந்தி மதிய உணவு அருந்திய பின் இந்த கூட்டம் தொடங்கியது. அதன்பின் இன்று காலை 5.30 மணி வரை இந்த கூட்டம் நடந்து இருக்கிறது. இரவு முழுக்க தூங்காமல் நிர்வாகிகளை சந்தித்து பிரியங்கா காந்தி ஆலோசனை நடத்தினார்.

யாரிடம் பேசினார்
மொத்தமாக 10 தொகுதிகளில் இருந்து நிர்வாகிகளை சந்தித்து பிரியங்கா காந்தி பேசினார். எல்லோரிடமும் சுமார் ஒரு மணி நேரம் பேசினார். லக்னோ , உன்னாவ், மோகன்லால்காஞ்ச், ரே பரேலி, பிரதாப்கார்க், பிரயாக்ராஜ், அம்பேத்கார் நகர், சிதாபூர், கவ்சாம்பி, அயோத்யா உள்ளிட்ட முக்கிய தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து அவர் பேசினார்.

முக்கியத்துவம்
ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 10 நிர்வாகிகளை சந்தித்து இவர் பேசினார். லக்னோவில் இருந்து மட்டும் 70 நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதேபோல் அயோத்யாவில் இருந்து 45 நிர்வாகிகளை சந்தித்து பேசினார். காங்கிரஸ் கட்சியில் உத்தர பிரதேசத்தில் மனக்கசப்புடன் இருக்கும் தலைவர்களையும் தனியாக சந்தித்தார்.

என்ன பேசினார்
இவர் தொண்டர்களிடம் பேசிய சில முக்கிய விஷயங்கள்,
1. இந்த தேர்தல் ராகுல் காந்திக்கும் மோடிக்கும் இடையிலான தேர்தல்தான்.
2. கட்சிக்குள் எந்த கோஷ்டி பிரச்சனையும் இருக்க கூடாது.
3. யாரும் குழு குழுவாக சேர கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
4. காங்கிரஸ் யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ, அவர் யாராக இருந்தாலும் அவருக்காக தீவிரமாக உழைக்க வேண்டும்.

பேட்டி அளித்தார்
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு சிறிய பேட்டி அளித்த பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் உட்கட்டமைப்பு குறித்து இந்த சந்திப்பு மூலம் அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது. லோக்சபா தேர்தலுக்கு முன் எப்படி தடைகளை கடப்பது என்பது குறித்து இவர்களுடன் விவாதித்து பேசி வருகிறோம், என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications