வெள்ளிக்கிழமை தொழுகையை வீட்டில் செய்யுங்கள்.. ஹோலியையொட்டி யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.. சர்ச்சை
லக்னோ: ஹோலி பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகை என்பது இஸ்லாமியர்களுக்கு முக்கியமானது. இப்போது ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வரும் சூழலில் அந்த தொழுமை கூடுதல் முக்கியத்தை பெற்றுள்ளது. அன்றைய தினம் பண்டிகை வரும் நிலையில் ஹோலியை விரும்பாதவர்கள் மசூதிக்கு சென்று தொழுகை நடத்த வேண்டாம். வீட்டிலேயே தொழுமை நடத்தி கொள்ளுங்கள் என்று உத்தர பிரதேச மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யாத் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நாடு முழுவதும் வரும் 14ம் தேதி ஹோலி பண்டிகை என்பது கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை தென்மாநிலங்களை காட்டிலும் வடமாநில மக்களால் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி பண்டிகையின்போது பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணம் பூசிக்கொள்வதும், வண்ண தண்ணீரை ஊற்றி கொள்வதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி என்பது வெள்ளிக்கிழமையாக உள்ளது. இஸ்லாமியர்களை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை தொழுகை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமியர்கள் மசூதி சென்று தொழுகை நடத்தி வருகின்றனர்.
அதுவும் தற்போது ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இதனால் வெள்ளிக்கிழமை தொழுகையை இஸ்லாமியர்கள் மிகவும் உயர்ந்ததாக கருதுகின்றனர். இந்நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் ஹோலி பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் வீட்டை விட்டு வெளியேற வர வேண்டாம் என்று காவல்துறை அதிகாரி கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அதாவது ஹோலி பண்டிகையையொட்டி உத்தர பிரதேசத்தில் அமைதி கூட்டம் என்பது நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்து, இஸ்லாமியர்கள் பங்கேற்கு வருகின்றன. இந்த கூட்டத்தில் சாம்பல் டிஎஸ்பி அனுஜ் சவுத்ரி, ‛‛ஹோலி பண்டிகை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறத. ஆனால் வெள்ளிக்கிழமை தொழுகை என்பது ஆண்டுக்கு 52 முறை வருகிறது. இதனால் ஹோலி பண்டிகையின்போது வண்ணம் பூசுவதை பிரச்சனையை கருதுவோர் வீட்டிலேயே தொழுகை நடத்துவது நல்லது. ஹோலி பண்டிகை முடியும் வரை வெளியே வர வேண்டாம்'' என்று கூறினார்.
இது சர்ச்சையானது. இஸ்லாமியர்கள் போலீஸ் அதிகாரி அனுஜ் சவுத்ரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு யோகி ஆதித்யநாத், "ஹோலி பண்டிகை தொடர்பாக அறிவுரை வழங்கி உள்ள போலீஸ் அதிகாரிஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர். அர்ஜுனா விருது பெற்றவர். முன்னாள் மல்யுத்த வீரர். அவர் மல்யுத்த வீரர் போல் பேசி உள்ளார். அவரது வார்த்தைகளால் சிலர் புண்பட்டு இருக்கலாம். ஆனால் உண்மை என்பது உண்மையாகவே இருக்கும். இதனால் அவர் கூறியதை ஏற்க வேண்டும்.
ஹோலி பண்டிகை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படுகிறது, ஆனால் ஒவ்வொரு வாரமும் தொழுகை மேற்கொள்ள முடியும். ஆண்டுக்கு 53 முறை தொழுகை சமயத்தில் கொண்டாட்ட மனநிலையில், மற்றவர்கள் வண்ணங்களை பூச வாய்ப்புள்ளதால் முஸ்லீம்கள் கொண்டாட்டம் முடியும் வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்" என்று போலீஸ் அதிகாரியின் அறிவுரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஹோலி பண்டிகை தினமான வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே தொழுகை நடத்தலாம் என்பதை யோகி ஆதித்யநாத்தும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. போலீஸ் அதிகாரி மட்டுமியின்றி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு சாம்பல் டிஎஸ்பியாக உள்ள அனுஜ் சவுத்ரி யார்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அனுஜ் சவுத்ரி அடிப்படையில் மல்யுத்த வீரர். இவர் நம் நாட்டுக்காக 1997 முதல் 2014ம் ஆண்டு வரை தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வந்தார். 2002, 2010ம் ஆண்டில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கமும், அதன்பிறகு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 2 வெண்கல பதக்கத்தையும் வென்றார். இவர் விளையாட்டு வீரர்கள் கோட்டாவில் உத்தர பிரதேசத்தில் டிஎஸ்பியாக கடந்த 2012ம் ஆண்டில் பணியில் சேர்ந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பீகார் மாநிலம் பிஸ்ஃபி தொகுதி பாஜக எம்எல்ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சோலும் சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர், "ஆண்டுக்கு 52 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. இதில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஹோலி பண்டிகை வருகிறது. அன்று இந்துக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட முஸ்லிம்கள் அனுமதிக்க வேண்டும். தங்கள் மீது வண்ணங்கள் பூசப்பட்டால் முஸ்லிம்கள் கோபப்படக்கூடாது. அவர்களுக்கு இதனை பிரச்சினையாக கருதினால் வீட்டிலேயே இருக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கு இது அவசியம்" என்று கூறி கண்டனத்துக்கு உள்ளானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications