"ஐயோ.. அவரா.. ரொம்ப பயங்கரமான ஆளாச்சே".. உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தை புகழ்ந்த 'பிரபல' ரவுடி
லக்னோ: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அம்மாநிலத்தைச் சேர்ந்த பயங்கர ரவுடி ஒருவர் புகழ்ந்து தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவர், நீதிமன்றத்துக்கு செல்லும் போது யோகி ஆதித்யநாத்தை அவர் புகழ்ந்து தள்ளினார்.
யோகி ஆதித்யநாத்தை பாஜக தலைவர்களை வைத்துதான் அக்கட்சித் தலைமை இதுவரை புகழ்ந்து பேச செய்தது. ஆனால் தற்போது ரவுடிகளும் இந்தப் பட்டியலில் சேர்ந்துவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கிண்டல் அடித்துள்ளன.

பயங்கர ரவுடி..
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்தவர் அடிக் அகமது (52). பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது 30-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், 60-க்கும் மேற்பட்ட ஆள்கடத்தல் வழக்குகள் உள்ளன. தனது எதிரிகளை மிகவும் கொடூரமாக கொலை செய்வது அடிக் அகமதின் பாணி எனக் கூறப்படுகிறது. ரவுடியாக இருந்தபோதே, அரசியல் கட்சியை தொடங்கிய அவர், பின்னர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, மேற்கு அலகாபாத் தொகுதியில் நின்று எம்.பி.யாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உபியை உலுக்கிய கொலை
இதனிடையே, கடந்த 2005-ம் ஆண்டு தனது தம்பி அஷ்ரஃபை, எம்எல்ஏ தேர்தலில் அடிக் அகமது நிற்க செய்தார். தனக்கு பயந்துகொண்டு யாரும் அஷ்ரஃபை எதிர்த்து தேர்தலில் நிற்க மாட்டார்கள் என அடிக் அகமது எண்ணினார். ஆனால், பகுஜன் சமாஜ் சார்பில் ராஜு பால் என்பவர் அதே தொகுதியில் போட்டியிட்டு அஷ்ரஃபை தோற்கடித்தார். இதனால் ஆத்திரமடைந்த அடிக் அகமது, எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ராஜு பாலை கொடூரமாக கொலை செய்தார். இது, உத்தரபிரதேசத்தில் அந்தக் காலக்கட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

யோகியை வசைபாடிய ரவுடி
இந்த வழக்கில் அடிக் அகமது, அவரது தம்பி அஷ்ரஃப் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இருந்தபோதிலும், சமாஜ்வாதி ஆட்சி நடைபெற்றதால் அவர் ஜாமீனில் சுதந்திரமாகவே நடமாடி வந்தார். இந்நிலையில், முதல்வர் யோகி ஆதிய்நாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக அடிக் அகமது மீதான வழக்கு விசாரணைகள் வேகம் எடுத்தன. அவரது பல சொத்துகளை அரசு கைப்பற்றியது. ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டிருந்த அவருக்கு சொந்தமான வீடு, ஹோட்டல்கள் இடித்து தள்ளப்பட்டன. இதனால் ஆத்திரத்தில் இருந்த அடிக் அகமது, முதல்வர் யோகி ஆதிய்நாத்தை கடுமையாக திட்டி வந்தார். அரசியல் ரீதியாக தான் பழிவாங்கப்படுவதாகவும் அவர் கூறி வந்தார்.

வேற லெவலில் புகழ்ச்சி
இந்நிலையில், நேற்று சிறையில் இருந்து அடிக் அகமதும் அவரது கூட்டடாளிகளும் சிபிஐ நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அடிக் அகமது, வெளியில் நின்றிருந்த செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் உத்தரபிரதேசம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. யோகி ஆதித்யநாத் மிகவும் தைரியசாலி. அவரது திறமைக்கு ஈடே கிடையாது. இனி எப்போது உத்தரபிரதேசத்தில் யோகியின் ஆட்சிதான் இருக்க வேண்டும்" என்றார். அடிக் அகமதின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர், "பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பாராட்டும் அளவுக்குதான் யோகி ஆதித்யநாத் ஆட்சி உள்ளது" என விமர்சித்திருக்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications