முதலிரவில் "மாரடைப்பு.." அப்படியே சரிந்த தம்பதி! முதலில் கணவர்.. அடுத்து மனைவி.! அதிர்ந்த உறவினர்கள்
லக்னோ: மாறி வரும் வாழ்க்கை முறை காரணமாக இப்போது மாரடைப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையே புதுமண தம்பதி ஒரே நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த நவீனக் காலத்தில் வாழ்க்கை முறை நிறையவே மாறிவிட்டது. இப்போது ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும்.. அனைத்தையும் நொடிகளில் வீட்டில் இருந்தபடியே செய்து முடித்துவிடலாம் என்ற நிலையே இருக்கிறது.
ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை அனைத்தையும் மொபைலிலேயே செய்ய முடிகிறது. உணவு டெலவரி கூட நாம் மொபைலில் ஆட்ரட் போட்டால் சற்று நேரத்தில் சுடசுட அவை வீடுகளுக்கே வந்துவிடுகிறது.

உடல்நிலை பாதிப்பு: இப்படியே வெளியே போகாமல் வீடுகளிலேயே நாம் பெருவாரியாக முடங்கியுள்ளோம். அதேபோல நீண்ட நேரம் நாம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் போக்கும் அதிகரித்துவிட்டது. பலரும் தங்கள் வேலைக்காக ஒரே இடத்தில் 8, 9 மணி நேரம் அமர்ந்திருக்க வேண்டி உள்ளது. இவை எல்லாம் சேர்த்து நமது உடல்நிலையை மிகக் கடுமையாகப் பாதிக்கிறது. இதனால் முன்பு அரிதாக ஏற்பட்ட நோய்களும் கூட இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கிவிட்டது.
குறிப்பாக மாரடைப்பு என்பது முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டும் ஏற்படும் என்ற நிலை மாறி இப்போது பலரும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. எந்தவொரு இணை நோயும் இல்லாத இளைஞர்கள் கூட திடீர் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் கொடூர சம்பவங்கள் சமீப காலத்தில் இப்போது அதிகரித்துள்ளது. இப்போது அதேபோன்ற ஒரு ஷாக் சம்பவம் தான் நடந்துள்ளது.
முதலிரவு: உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் புதிதாகத் திருமணமான தம்பதிகள் தங்கள் முதலிரவின் போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு இதற்கு முந்தைய நாள் தான் திருமணம் நடந்திருந்தது. மறுநாள் இரவு முதலிரவு நடந்த நிலையில், அவர்கள் உயிரிழந்து கிடந்தனர். அவர்கள் இருவரும் மாரடைப்பால் உயிரிழந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த அவர்கள் 22 வயதான பிரதாப் யாதவ் மற்றும் அவரது மனைவி 20 வயதான புஷ்பா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களுக்கு மே 30ஆம் தேதி அன்று திருமணம் நடந்த நிலையில், மறுநாள் காலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாரடைப்பு: இதில் தான் மாரடைப்பே அவர்கள் உயிரிழப்பிற்குக் காரணம் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், இதற்கு முன்பு அவர்களுக்கு எந்தவொரு இதயப் பிரச்சனையும் இருந்ததாகத் தெரியவில்லை. இதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் போலீசார் இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
அந்த தம்பதியினர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட போது, ரூமின் கதவு உள்பக்கத்தில் இருந்து பூட்டப்பட்டு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், அந்த தம்பதி இருந்த ரூமில் போதுமான காற்றோட்டம் இல்லை என்றும் இதனால் மூச்சுத் திணறல் காரணமாக அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் மேலும் கூறுகையில், "யாரும் வலுக்கட்டாயமாக ரூமில் நுழைந்தது போல தெரியவில்லை. அவர்களைத் தாக்கப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை. இப்போது நாங்கள் அன்றைய தினம் என்ன நடந்து என்பதை அறிய டைம்லைன் ரெடி செய்து வருகிறோம். இதன் மூலம் அன்று என்ன நடந்திருக்கும் என்பதை நம்மால் ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள முடியும்" என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications