சக மாணவர்களுடன் பேசிய 5ஆம் வகுப்பு மாணவி.. சொந்த மகளையே கொடூரமாகக் கொன்ற பெற்றோர்! மிரண்ட போலீசார்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது பெற்றோர்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் மைனர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் அதிகமாகவே உள்ளது
பெரும்பாலும் சிறுமிகளுக்கு நன்கு தெரிந்த நபர்கள் மூலமே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

உத்தரப் பிரதேசம்
இந்தச் சூழலில், உத்தரப் பிரதேச மாநிம் மீருட் அருகே 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை அவரது பெற்றோர்களே கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. மேலும், போலீசார் விசாரணையில் இந்தக் கொடூரத்தைச் செய்ய அவர்கள் சொன்ன காரணம் போலீசாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

பெற்றோர்
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி காணாமல் போனதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், இப்போது அந்த சிறுமியின் பெற்றோரைக் கைது செய்துள்ளனர். பெற்ற மகளையே கொலை செய்வதற்காகக் கால்வாயில் தள்ளிவிட்டது விசாரணையில் தெரிய வந்தது.

காரணம்
பெற்றோர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தங்கள் மகள் பல சிறுவர்களுடன் பேசுவதாகவும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த தம்பதி, பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் அவளைக் கால்வாயில் தள்ளிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், சிறுமியின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை.

புகார்
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு கேசவ் குமார் கூறுகையில், "ஐந்தாம் வகுப்பு படிக்கும் தங்கள் மகள் மாயமாகிவிட்டதாக பப்லுவும் அவரது மனைவி ரூபியும் செப்டம்பர் 1ம் தேதி போலீசில் புகார் அளித்தனர். நாங்கள் விசாரணையை நடத்தினோம். அதில் அவர்கள் இருவரும் தான் மகளைக் கால்வாயில் தள்ளியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை நாங்கள் கைது செய்தோம்.

கைது
அவர்களிடம் நடத்திய விசாரணையில் மகளைக் கால்வாயில் தள்ளிவிட்டதை ஒப்புக் கொண்ட தம்பதி வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சிறுமியின் உடலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்" என்றார். பெற்ற மகளை அவரது பெற்றோரே கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications