தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான 3 நாள் கருத்தரங்கு.. பிரதமர் பங்கேற்பு.. வாரணாசியில்..!
வாரணாசியில் 3 நாள் பாரதிய கல்வி தொடர்பான விழாவை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
லக்னோ: வாரணாசியில் மூன்று நாள் நடைபெற போகும், அகில பாரதிய கல்வி தொடர்பான விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தலைமை செயலாளர்களின் கருத்தரங்கு கடந்த மாதம் நடைபெற்றது.. இதில், பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த கருத்தரங்கில் பங்கேற்ற மாநிலங்கள், தேசிய கல்வி கொள்கைகள் குறித்து, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டன...

3 நாள் கருத்தரங்கு
இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்வி அமைச்சகம் 3 நாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த அகில பாரதீய கல்வி தொடர்பான விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்..மேலும், மாலை நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் 1800 கோடி ரூபாய் மதிப்புடைய பல்வறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்..

பிரதமர் மோடி
தேசிய கல்விக் கொள்கையின் இலக்கை அடைவதற்கான வழிகாட்டுதல் தொடர்பான கருத்தரங்கில், அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் துணைவேந்தர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.. மேலும், அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் இயக்குநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிகிறது...

தேசிய கல்வி கொள்கை
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல முன்முயற்சிகளை வெற்றிகரமாகச் செயல்படுத்திய பிறகு, தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ, நாடு முழுவதும் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது பற்றி இந்த கருத்தரங்கில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இன்று முதல் 9ம் தேதி வரையிலான மூன்று நாட்கள் நடக்கும் இந்த கருத்தரங்கானது, முன்னணி இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு தேசியக் கல்விக் கொள்கை, வெற்றிகரமான செயல்பாடுகள் சிறந்த நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவுகள் குறித்து விவாதித்து பகிர்ந்து கொள்வதற்கான தளமாகவும் அமையும் என்றும் நம்பப்படுகிறது...

வேலைவாய்ப்பு
முழுமையான கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, இந்திய அறிவு அமைப்புகள், கல்வியின் சர்வதேசமயமாக்கல், டிஜிட்டல் அதிகாரமளித்தல், ஆன்லைன் கல்வி, ஆராய்ச்சி, தொழில்முனைவு, தரம், தரவரிசை, அங்கீகாரம், சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வி, தரமான கல்விக்கான ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற போவது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications