தனது மகனை கடிக்க துரத்திய நாயின் வாயை கிழித்த தந்தை! போலீஸ் வழக்குப்பதிவு
லக்னோ: தெருநாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தனது மகனை கடிக்க துரத்திய தெருநாயின் தந்தை ஒருவர் கிழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிறுவனின் தந்தையின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 19,000 பேர் தெருநாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 55 பேர் உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நாய்க்கடி சம்பவம் 68 லட்சமாக பதிவாகிறது. இதில் 35% மக்கள் உயிரிழக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது தவிர தெரு நாய்களால் ஏற்படும் கழிவுகளும் சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் தெருநாய் பிரச்சனையை தேசிய பேரிடராக அணுகி தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக வழக்கில் சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு கவனம் பெற்றிருந்தது. இந்நிலையில் தெரு நாய்களை தாக்கும் சம்பவங்களும், அவைகளுக்கு உணவளிக்கும் நபர்களை தாக்கும் சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன.
இந்நிலையில் உத்தரப் பிரதேசம் உன்னாவ் பகுதியில் தந்தையுடன் சென்றுக்கொண்டிருந்த சிறுவனை தெருநாய் கடிக்க துரத்தியிருக்கிறது. இதை பார்த்து அதிர்ந்த தந்தை தெருநாயை துரத்தி சென்று கடுமையாக தாக்கியுள்ளார். குறிப்பாக நாயின் தாடையை கிழித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்ட நிலையில், தந்தையின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். வீடியோவில் இருப்பவர் வீரேந்தர் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோ குறித்தும், அவர் மீது பதியப்பட்ட வழக்கு குறித்தும் பலரும் சோஷியல் மீடியாக்களில் கருத்தை தெரிவித்து வருகின்றனர். "உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், பாஜகவும் வாயில்லா ஜீவன்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டிருக்கும் ராட்சதத்தனம் பயங்கரமானது. உன்னாவ் பகுதியில் வீரேந்தர் என்பவர் கைகளால் ஒரு நாயின் தாடையைக் கிழித்திருக்கிறார்.
அந்த நாய் வீரேந்தரின் மகனைத் துரத்தியிருக்கிறது. அந்த விலங்குக்கு அவ்வளவு அறிவு இல்லை, ஆனால் அந்த மனிதனுக்கு நிச்சயம் இருந்திருக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் நீதித்துறை நடவடிக்கை எடுக்காதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. விலங்குகளுக்கு உணவு கொடுப்பவர்கள் எல்லா இடங்களிலும் தாக்கப்படுகிறார்கள்" என்று விலங்கு ஆர்வலர் புலம்பியுள்ளார்.
மறுபுறம், நாய் தாக்கி ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? நாய் ஆதரவாளர்கள் ஏற்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications