அதிகாலையிலேயே ஷாக்.. 4 பஸ்கள் - 2 கார்கள் மோதி தீப்பிடித்தது.. 4 பேர் பலி - 25 பேர் காயம்.. பனி மூட்டத்தால் சோகம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் டெல்லி - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று அதிகாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து 4 பஸ்கள், 2 கார்கள் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 4 பேர் உடல் கருகி பலியாகி உள்ள நிலையில் 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் டெல்லி - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலை செல்கிறது. இந்நிலையில் இன்று காலையில் அந்த சாலையில் கோர விபத்து நடந்தது. பனிமூட்டம் அதிகமாக இருந்த நிலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் பஸ்கள், கார்கள் அடுத்தடுத்து மோதின.

இதில் ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ அடுத்தடுத்து பிற வாகனங்களுக்கும் பரவியது. இதனால் அனைத்து வாகனங்களும் பற்றி எரிந்தன. விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் பலரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.
இருப்பினும் விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் பலரும் பஸ்களில் இருந்து வெளியே ஓடிவந்துள்ளனர். ஆனாலும், பலர் பஸ், வாகனங்களில் சிக்கி உள்ளனர். இதையடுத்து போலீசார், தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து வாகனங்களில் பிடித்த தீயை அணைத்தனர்.
முதற்கட்டமாக 4 பேர் வரை பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து பற்றி உயிர் பிழைத்த ஒருவர் கூறுகையில், ‛‛3-4 பஸ்கள் மோதி தீப்பிடித்தன. விபத்து நடந்தபோது நான் தூங்கி கொண்டிருந்தேன். அதிகாலை 4 மணிக்கு விபத்து நடந்தது. அப்போது பஸ்சில் முழுவதுமாக மக்கள் இருந்தனர். அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்தது'' என்று கூறியுள்ளார்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛4 பஸ்கள், 2 கார்கள் அடுத்தடுத்து விபத்து நடந்துள்ளது. கடும் பனிமூட்டத்தால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கி உள்ளன'' என்றனர்.தற்போது உத்தர பிரதேசத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
நேற்றைய தினம் பல நகரங்களில் காற்றின் தரம் குறைந்து காணப்பட்டது. அதோடு பனிமூட்டத்தால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உருவாகி இருந்தது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை மொத்தமாக பனிமூட்டம் மூடியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications