பதான் சர்ச்சை.. ஷாரூக் கானை பார்த்தால் அப்படியே உயிரோடு வச்சு எரித்துவிடணும்.. அயோத்தி துறவி ஆவேசம்
லக்னோ: பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை உயிரோடு எரிக்க வேண்டும் என பதான் விவகாரத்தில் அயோத்தியின் துறவி மிரட்டல் விடுத்துள்ளார்.
அயோத்தியில் தபஸ்வி சாஹ்வானியின் ஜெகத்குரு பரமஹம்ச ஆச்சார்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பதான் திரைப்படத்தில் காவி நிறத்தை கொச்சைப்படுத்தியுள்ளார்கள்.
இது போன்ற திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். நபிகள் நாயகத்திற்கு எதிராக ஷாரூக் கான் வெப் சீரிஸை உருவாக்கியதில்லை. ஏனென்றால் அவருக்கு அந்த தைரியம் இல்லை. அவர் சனாதன தர்மத்தை மட்டும் அவமதித்து வருகிறார்.

பணம் சம்பாதிக்க
பணம் சம்பாதிக்க சனாதன தர்மத்தை அவமதிக்கிறார்கள். சனாதன தர்மத்தை அவமதித்தால், தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். நான் மட்டும ஷாரூக்கானை நேரில் பார்த்தால் உயிரோடு எரித்துவிடுவேன். வேறு யாராவது அந்த நடிகரை எரித்தால் அவர்கள் யாராக இருந்தாலும் நீதிமன்றத்தில் நான் பாதுகாக்கிறேன்.

தியேட்டரை எரிப்போம்
பதான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக தடை விதிக்கப்பட வேண்டும் ஒரு வேளை எந்த தியேட்டரிலாவது பதான் திரையிடப்பட்டால் அந்த தியேட்டர் தீவைத்து எரிக்கப்படும் என துறவி மிரட்டல் விடுத்துள்ளார். ஷாரூக் கான், தீபிகா படுகோன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது பதான் திரைப்படம்.

ஜனவரி 25 இல் ரிலீஸ்
இந்த திரைப்படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் பேஷ்ரம் ரங் எனும் பாடல் வெளியாகியுள்ளது. இதில் தீபிகா படுகோன் நீச்சல் உடையில் தோன்றுகிறார். அந்த பாடல் முழுவதும் டூ பீஸ் உடையையே கலர் கலராக அணிந்து மிகவும் ஆபாசமாக நடித்துள்ளார். ஷாரூக்கானும் தீபிகாவுடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார்.

காவி நிறம் கொச்சை
இந்த பாடலை குடும்பத்துடன் பார்க்க முடியாத சூழல் எழுந்துள்ளது. இந்த படத்தில் காவி உடையில் இருவரும் மிக நெருக்கமாக நடித்துள்ளனர். இந்துக்களின் புனித நிறமான காவியை கொச்சைப்படுத்தியுள்ளதாக இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்த பாடலின் காட்சிகளை நீக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன. இதுகுறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியிருப்பதாவது: இந்த பாடலில் வரும் உடைகள் ஆரம்பத்திலிருந்தே ஆட்சேபத்துக்குரியதாகியுள்ளது. மோசமான எண்ணத்தில் பதான் படத்தில் இந்த பாடல் எடுக்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.

பெயரும் தவறானது
இந்த பாடலின் பெயரான பேஷ்ரம் ரங் என்ற வார்த்தையும் ஆட்சேபத்துக்குரியது என்கிறார். இந்த பாடலை இயற்றியவர் விஷால்- சேகர், பாடலை எழுதியவர் குமார். படத்தை இயக்கியவர் சித்தார்த் ஆனந்த். காவி உடையை அணிந்து கொண்டு எத்தனையோ பேர் சிறுமிகளையும் பெண்களையும் பலாத்காரம் செய்கிறார்களே அதெல்லாம் தவறில்லையாா என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications