பேஸ்புக்கில் அறிமுகமான பெண்.. நேரில் வரவைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. டாக்டர்கள் கொடூர செயல்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பேஸ்புக் மூலமாக பழகிய பெண்ணை நேரில் வரவழைத்து டாக்டர்கள் 2 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நவீன உலகில் செல்போன்கள் இல்லாதவர்களே இல்லை என சொல்லிவிடலாம்.
அந்த அளவுக்கு அனைத்து வயதினர் மத்தியிலும் செல்போன் ஆதிக்கம் மிகுந்துவிட்டது.

மோசடி சம்பவங்கள்
குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் தற்போதைய காலத்துக்கு இன்றியமையாத ஒன்றாகவே மாறிவிட்டது. இதில் நண்பர்களிடம் பேசுவதற்காக பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல அப்களை இன்ஸ்டால் செய்து வைக்கின்றனர். ஆனால் இத்தகைய அப்களை ஒருசில விஷமிகள் தவறான நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர். ஆரம்பத்தில் நண்பர் போல் பழகி பின்னர் ஏமாற்றுவதும்.. பணம் கேட்டு மிரட்டுவதும் என பல மோசடி சம்பவங்களும் இதன்வழியாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

பாலியல் வன்கொடுமை
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் பஸ்டி பகுதியில் சமூக வலைத்தளம் மூலமாக பழகிய டாக்டர் நண்பரை பார்க்க வந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நேர்ந்த கொடுமையால் மனம் வெதும்பி போன பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக பஸ்டி நகர போலீசாரிடம் இது குறித்து புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட மருத்துவரை கைது செய்துள்ளனர்.

பேஸ்புக்கில் பழக்கம்
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: பாதிக்கப்பட்ட பெண் சமூக வலைத்தளத்தை அடிக்கடி பயன்படுத்துபவராம். அப்படி ஒருநாள் பேஸ்புக் பயன்படுத்தி கொண்டு இருந்த போது, டாக்டர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. தொடர்ந்து இருவரும்பேஸ்புக் மூலமாக பேசிக்கொண்டு இருந்து இருக்கின்றனர். பின்னர் இவர்களின் பழக்கம் அதிரித்தது. இதனால் நெருங்கிய நண்பர்கள் போல இருவரும் பேஸ்புக் பார்க்காமல் பல நாட்கள் பேசிக்கொண்டு இருந்து இருக்கின்றனர்.

டாக்டர்கள் கைது
ஒருநாள், நாம் நேரில் சந்திக்கலாம் என்று அந்த டாக்டர் பெண்ணை அழைத்து இருக்கிறார். நன்கு பழகிய நண்பர்தானே என்று நம்பி அந்த பெண்ணும் சென்று இருக்கிறார். ஆனால் மருத்துவமனைக்கு சென்ற பிறகுதான் பேஸ்புக்கில் அறிமுகமான டாக்டர் நண்பரின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. அருகில் இருந்த விடுதிக்கு பெண்ணை அழைத்து சென்ற அந்த டாக்டர், தனது நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர்கள் இருவருமே டாக்டர்கள் தானாம். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதோடு பாலியல் வன்கொடுமை செய்த டாக்டர்களை கைது செய்துள்ளோம்' என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications