வேற லெவலில் மாறும் உ.பி சாலைகள்! 15 நாட்கள் முழு வீச்சில் பராமரிப்பு பணிகள்.. அசத்தும் யோகி அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சாலை பராமரிப்பு பணிகளுக்காக 15 நாட்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 15 நாட்களுக்குள் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகளை முடித்துவிட வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதன்மையானதாக இருக்கிறது. இங்கு அதிக அளவில் மக்கள் தொகை இருக்கிறது. அதற்கேற்றார் போல வாகனங்களின் எண்ணிக்கையும் இருக்கிறது. இந்நிலையில் சாலை பராமரிப்பு பணிகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. 15 நாட்களுக்கு இந்த பணிகளை முடிக்க வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இந்த 15 நாட்களில் சேதமடைந்த சாலைகள் பழுதுபார்க்கப்படும். அதேபோல வேகத்தடைகள் அமைப்பது, எதிர் ஒளிப்பான்களை பொருத்துவது, சேதமடைந்த நடைபாதைகளை சரிசெய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக சாலையில் பள்ளங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது முக்கியமான விஷயமாக இருக்கிறது. இது தவிர CCTV கேமராக்கள் மற்றும் ANPR கேமராக்களை பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதில் ANPR கேமராக்கள், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க பயன்படுகிறது.
இது ஒருபுறம் எனில், மறுபுறம் போக்குவரத்து விதிகள் குறித்து மக்களுக்கு இந்த 15 நாட்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும், சுங்கச்சாவடியில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் பணியாளர்களுக்கு ஆபத்து காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கைகள் மூலம் உத்தரப் பிரதேசத்தில் விபத்துகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கலாம் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications