ஓட்டலில் விபச்சாரம்.. செக்டார் 41-ல் புகுந்த போலீஸ்.. 7 பெண்கள் மீட்பு.. யாரந்த 4 பேர்.. அதிரடி கைது
நொய்டாவின் 1ம் மண்டல காவல்துறை ஏசிபி ரஜ்னீஷ் வர்மா தலைமையில் இன்று காலையில் ஓட்டலில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.
லக்னோ: டெல்லியையொட்டி உள்ள நொய்டாவில் OYO நிறுவனம் தொடர்புடைய ஹோட்டல் ரூம்களில் விபச்சாரம் நடத்தியதாக 4 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 7 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு பாலியில் தொழிலுக்கு உட்படுத்தப்படுவது சர்வதேச அளவில் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது. இதற்கு எதிராக நீண்ட நெடிய போராட்டங்களை அரசு நடத்தி வருகிறது. இந்தியாவிலும் இதுபோன்று பெண்களை பாலியல் தொழிலிருந்து மீட்டெடுக்க அரசு முழு முயற்சியுடன் போராடி வருகிறது. அந்த வகையில் டெல்லிக்கு அருகே நொய்டாவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தபட்ட பெண்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
நொய்டாவின் செக்டார் 41ல் ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஓட்டலை டெல்லியை சேர்ந்த சாஹில் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவ்வாறு இருக்கையில், ஓட்டலில் சில சமூக விரோத செயல்கள் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து நொய்டாவின் 1ம் மண்டல காவல்துறை ஏசிபி ரஜ்னீஷ் வர்மா தலைமையில் இன்று காலையில் ஓட்டலில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.

ரெய்டு
காவலர்களுடன் மனித கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகளும் ரெய்டு நடத்தினர். ரெய்டு முன்பாக ஓட்டலுக்கு வெளியே காத்திருந்த காவல்துறையினர் யார் யார் சென்று வருகிறார்கள் என்பதை கண்காணித்தனர். கண்காணிப்பையடுத்து அதிரடியாக உள்ளே புகுந்த காவலர்கள் ஒவ்வொரு அறையாக பரிசோதித்தனர். பரிசோதனையில் 7 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். அதேபோல 4 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் ஓட்டலின் ஊழியர்கள் என்றும், ஒருவர் வாடிக்கையாளர் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்,

7 இளம் பெண்கள்
"வழக்கமாக ஓட்டல்களில் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் எந்த ஓட்டல்களில் இது நடக்கிறது என்பதை கண்டுபிடிப்பதுதான் மிகவும் சவாலான ஒன்றாகும். எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்தான் இதனை நாங்கள் கண்டுபிடித்தோம். ஓட்டலிலிருந்து 7 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பல போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மட்டுமல்லாது ரூ.1,700 பணம் மற்றும் பேடிஎம் ஸ்கேனர், 14 மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தல் குற்ற பிரிவின் கீழ் ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் என 4 ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரச்னைகள்
இதில் ஓட்டல் உரிமையாளர் சாஹில் மற்றும் அவரது மனைவி தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடி வருகிறோம்" என்ற காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 8 லட்சம் பெண்கள் பாலியல் தொழில்களில் ஈடுபட்டுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு கூறுகிறது. இது முழுமையானது இல்லையென்று சமூக ஆர்வலர்கள் பலர் கூறியுள்ளனர். உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிக அளவில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இந்த தொழிலில் ஈடுபடும் பெண்கள் பலர் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை வெளியில் சொல்லவே தயங்குகிறார்கள் என மனித உரிமைகள் அமைப்பினர் கூறியுள்ளனர்.

பெண்களின் நிலை
பெரும்பாலும் கடத்தப்படும் சிறுமிகள் சிறு வயதிலிருந்தே இந்த தொழிலுக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்றும், அல்லது இதற்காகவே சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை கடத்தப்படுகிறார்கள். பொதுவாக தெரித்த எய்ட்ஸ் நோயை விட சில புதிய பால்வினை நோய்களால் இவர்கள் பாதிக்கப்படுவதுடன் இதனை மற்றவர்களுக்கு கடத்தும் ஹாட்ஸ்பாட்டாகவும் இவர்கள் மாற்றப்படுகிறார்கள். இந்நிலைமையை மாற்ற பாலியல் கல்வி அவசியம் என்று மகளிர் அமைப்புகள் அறிவுறுத்துகின்றன.












Click it and Unblock the Notifications