நான் பொம்பளை மாதிரியே இருக்கேனாம்.. என்னை மன்னிச்சிடுங்கப்பா.. 16 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

திருநங்கை என்று கூறியதால் 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டான்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: "நான் பொம்பளை மாதிரியே இருக்கேனாம்.. பொம்பளை மாதிரியே எல்லாம் செய்யறேனாம்.. என் ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க, அடுத்த ஜென்மத்தில் நான் பெண்ணாக பிறக்க ஆசீர்வாதம் செய்யுங்க.. என்னை மன்னிச்சிடுங்கப்பா" என்று 16 வயது சிறுவன் லட்டர் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், பரேய்லி பகுதியில் உள்ளது சுபாஷ் நகர்.. இங்கு வசித்து வந்தவர்தான் 10ம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுவன்.. 16 வயதாகிறது.. அண்ணன், அப்பாவுடன் இவர் ஒரே வீட்டில்தான் இருந்துள்ளார்.. ஆனால் இவரது தோற்றம் பெண் போலவே இருப்பதாக கூறப்படுகிறது.

transgender: 16 year old boy commits suicide for being called transgender in up

அதனால் நண்பர்கள் "திருநங்கைகள்" என்று கூப்பிட்டு கிண்டல் கேலி செய்து வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் இதை சிறுவனால் பொறுக்க முடியவில்லை.. கடுமையான மன உளைச்சலிலேயே இருந்திருக்கிறார். இறுதியாகதான் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. தகவலறிந்து போலீசார் வந்து சடலத்தை மீட்டனர்.. விசாரணையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதான் அந்த ரூமில் ஒரு லட்டர் இருந்ததை பார்த்தனர்.. சிறுவன் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் அது:

"அப்பா... என்னை எல்லாரும் பொண்ணு மாதிரியே இருக்கேன்னு கிண்டல் பண்றாங்க.. என் முகம், என் செயல் எல்லாமே பொண்ணுங்க மாதிரி இருக்காம்.. ஒருவேளை நான் திருநங்கைதானோ என்ற எண்ணம் எனக்கு வந்து கொண்டே இருந்தது.. என்னால் உங்க வாழ்க்கையும் இருளில் கிடப்பதை நான் விரும்பவில்லை.. என்னால் ஒரு நல்ல மகனாக இருக்க முடியாததற்கு மன்னிச்சுடுங்க அப்பா.

நான் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளேன். ஆனால் அடுத்த பிறவியில் நான் பெண்ணாக பிறக்கணும் என்று என்னை ஆசீர்வதியுங்கள்... அதே மாதிரி நம்ம குடும்பத்தில் யாருக்காவது பெண் குழந்தை பிறந்தால், நான்தான் திரும்பவும் பிறந்திருப்பதாக நம்புங்க" என்று எழுதியுள்ளார்... தொடர் விசாரணையும் போலீசார் நடத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த சிறுவன் எவ்வளவு நல்லவனாக இருந்திருக்கிறான்.. எந்த அளவுக்கு மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறான் என்பது புரிந்து கொள்ள முடிகிறது.. தன் நிலையை பற்றியும், எழுந்துள்ள சந்தேகத்தை பற்றியும் யாரிடமும் பேச சகஜமாக பேச முடியாத வயசு அது.. அதனால்தான் கூச்ச சுபாவத்திலும், குழப்பத்திலுமே தற்கொலை வரை எண்ணம் போயுள்ளது.

என்னதான் நாளுக்கு நாள் இந்த உலகம் நவநாகரீகமாக வளர்ந்தாலும், ஒருவரை உடல் தோற்றத்தை வைத்து விமர்சனம் செய்யும் அநாகரீகம் மட்டும் இன்னும் சிலரிடம் போகவே இல்லை.. இவர்களுக்கு எல்லாம் இன்னும் சரியான விழிப்புணர்வு தேவையா? என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்... நார்மலான உருவத்துடன் ஒருவர் இல்லாவிட்டால், அவர்களை கண்ணியத்துடன், முக்கியமாக சாதாரணமாக நடத்த வேண்டும் என்பதை மக்களுக்கு வலியுறுத்த வேண்டும்.. 16 வயது சிறுவன் எதையுமே வாய்விட்டு சொல்ல முடியாமல் போய் சேர்ந்து விட்டான்.. இனியாவது இதுபோன்ற விஷயத்தில் சமூக மாற்றம் என்பது அடிப்படை தேவையாக இருக்கிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+