மொதல்ல மாட்டு மூத்திரம்.. அடுத்து சாணம்.. இப்போ புகை போட்டு "சங்கு" ஊதும் பாஜக.. கொரோனா ஓடிருமாம்..!
கொரோனாவை விரட்ட புகை போட்டு வருகின்றனர் மீரட் பாஜகவினர்
லக்னோ: மாட்டு சாணம், மாட்டு கோமியத்தை அடுத்து, பாஜகவினர் சங்கு ஊதி, புகை போட்டு வருகிறார்கள்.. இதுவும் கொரோனாவை விரட்டும் இன்னொரு முயற்சியாம்..!
நாட்டில் 2வது அலை பரவி வருகிறது.. இது பன்மடங்கு பரவக்கூடிய வீரியம் மிக்கது.. இந்த 2வது அலை பரவல் குறித்து கடந்த டிசம்பர் மாதமே விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.. ஆனால் நாம்தான் கோட்டைவிட்டு விட்டோம்.
இப்போது நம்மை உலுக்கி எடுத்து வருகிறது.. அதிலும் வடமாநிலங்கள் அதிக அளவு இந்த தொற்றில் சிக்கி கொண்டுள்ளது.. லட்சக்கணக்கில் உயிரிழந்துவிட்டனர்.. ஒருநாளைக்கு குறைந்தது 4,500 பேராவது தொற்றில் இறந்துவிடும் கொடுமை நடந்து வருகிறது.

யோகி
அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலமும் ஒன்று.. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக இறந்துவிடுவதாக செய்திகள் வந்ததுமே, இனிமேல் அப்படி யாராவது தகவல் பரப்பினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று யோகி அரசு எச்சரித்திருந்தது.. ஆனாலும், அந்த மாநிலத்தில் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை குறையவில்லை.

அறிகுறி
இந்த வைரஸ் பற்றி இன்னும் முழுமையாக ஆராயவும் முடியவில்லை.. இந்த நோயின் அறிகுறிகள் இதுதான் என்று திட்டவட்டமாக ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அறிகுறிகள் புது புதுசாக வந்து கொண்டிருக்கிறது.. சில நேரங்களில் அறிகுறி இல்லாமலேயே இந்த வைரஸ் தாக்கியும் வருகிறது... எனவே, நிரந்தரமான தீர்வு, நிரந்தரமான மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில், கடந்த 2 வருஷமாக நம் ஆராய்ச்சியாளர்கள் இரவும் பகலும் அல்லாடி வருகிறார்கள்.

மாட்டு சாணம்
ஆனால், மாட்டு சாணத்தில் தொற்று போய்விடும் என்று பாஜக தரப்பு சொல்லி வருகிறது.. கோமியம் குடித்தால், கொரோனா வராது என்று பாஜக தலைவர்கள் சொல்லி வருகிறார்கள்.. இதில் மிக முக்கியமானவர் பாஜக எம்பி. பிரக்யா தாக்கூர்தான்.. தான் தினமும் கோமியம் குடிப்பதாக சொல்கிறார்.. இது தொடர்பாகவே தன்னுடைய கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

தலைவர்கள்
இத்தனைக்கும் உத்தரபிரதேசம் முதல் மணிப்பூர் வரை ஏராளமான மாநிலங்களில் பாஜக தலைவர்களே தொற்று பாதித்து இறந்துவிட்டனர்.. இவர்கள் இறந்த பிறகும், இதுபோலவே, சாணம், கோமியம் என்று சொல்லி வருகிறார்கள்..

புகை
இது சோஷியல் மீடியாவில் சர்ச்சையான கருத்துக்களையும் எழுப்பி வருகிறது.. இந்த பரபரப்பே இன்னும் முடியாத நிலையில், இன்னொரு விஷயத்தை பாஜக ஆரம்பித்துள்ளது.. அதாவது, புகை போடுவதாலும், சங்கு ஊதுவதாலும் தொற்றை ஈஸியாக விரட்டிவிடலாம் என்கிறது.. இப்படி சொன்னதோடு மட்டுமல்லாமல், தெரு தெருவாக புகையை போட்டு வருகின்றனர் பாஜகவினர்.

சங்கு
மீரட்டை சேர்ந்த பாஜக தலைவர் கோபால் சர்மா, ஒவ்வொரு தெருவாக போய் கொண்டிருக்கிறார்.. மாட்டு சாணம், நெய், மா மரத்தின் தண்டுகள், இவைகளுடன் கற்பூரம் சேர்த்து எரித்து, அதன்மூலம் வரும் புகையை தெரு தெருவாக போட்டு வருகிறார்.. கூடவே ஒரு சங்கை ஊதுகிறார்.. அந்த சங்கு ஊதினால் கொரோனா ஓடிவிடுமாம்.. அதுமட்டுமல்ல, அந்த புகையானது, ஸ்ட்ரைட்டாக, வளிமண்டலத்துக்கே சென்று, அங்கு பரவியிருக்கும் ஆபத்தான கண்ணுக்கு தெரியாத வைரஸை கொன்றுவிடுமாம்..!
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications