Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆசிரமம்”.. திகிலூட்டும் மர்ம மரணம்! தொழிலதிபருக்கு என்னாச்சு? சர்ச்சையில் சிக்கிய உபி சாமியார்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற கரௌலி பாபா என்ற சாமியாரின் ஆசிரமத்தில் தொழிலபதிபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரமத்தில் நடந்தது என்ன? விரிவாக பார்ப்போம்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கரௌலி பகுதியில் டாக்டர் சந்தோஷ் சிங் பதுரியா என்ற சாமியார் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். கரௌலி பாபா என்று அழைக்கப்படும் இந்த சாமியாருக்கு மாநிலம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இவரது ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார்கள்.

UP businessman mysterious death in Kanpur Karauli ashram

அரசியல், பொருளாதார ரீதியாக செல்வாக்கு பெற்ற இந்த சாமியாரின் கரௌலி ஆசிரமத்துக்கு தேவேந்திர சிங் பாதி என்ற 56 வயதான தொழிலதிபர் சென்று இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தேவேந்திர சிங் கரௌலி ஆசிரமத்துக்கு யோகா மற்றும் நச்சு நீக்க பயிற்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆசிரமத்துக்கு சென்ற 5 நாட்களாகியும் தொழிலதிபர் அங்கிருந்து வெளியே வரவில்லை.

இந்த நிலையில் ஆசிரமத்தில் உள்ள அறை ஒன்றில் தொழிலதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் முதுகுப்புறத்தில் தரையில் கிடந்தது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழிலதிபர் பாதி கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 7:30 மணியளவில் தனது அறையில் இருந்து வெளியே வந்ததாகவும், இரவு 9:30 மணிக்கே அவர் உறங்க சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுநாள் காலை அவர் அறையை விட்டு வெளியே வராத காரணத்தால் சந்தேகம் அடைந்த ஆசிரம பணியாளர்கள், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது அவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. குப்புற கிடந்த உடலை திருப்பி பார்த்தபோது அவர் இறந்ததை ஊழியர்கள் உறுதி செய்தூள்ளனர். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தெரியப்படுத்தாமலேயே அவர்கள் உடலை எடுத்து உள்ளனர்.

அதன் பிறகே பித்னு காவல் நிலையத்திற்கு ஆசிரம ஊழியர் கோபால் குப்தா என்பவர் புகார் அளித்து இருக்கிறார். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து தொழிலதிபரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு. உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

தொழில்பதர் பாதி அடிக்கடி கரௌலி பாபாவின் ஆசிரமத்துக்கு செல்வதை வழக்கமாக வைத்து உள்ளார். இதுகுறித்து தெரிவித்து உள்ள துணை காவல் ஆணையர் தேவேந்திர குமார் சுக்லா, தொழில்பர் மரணத்துக்கான காரணத்தை இன்னும் உறுதிபடுத்த முடியவில்லை. அவரது உள் உறுப்புகள் பாதுகாக்கப்பட்டு உள்ளனர். இறந்தவரின் குடும்பத்தினர் தரப்பில் இன்னும் எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. அதே நேரம் நாங்கள் விசாரணையை தொடங்கி உள்ளோம்.

UP businessman mysterious death in Kanpur Karauli ashram

தடயவியல் பரிசோதனையில், இறந்தவர் உடலில் உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளன. கால் விரலில் கீரலும் மூக்கில் ரத்தமும் கசிந்து உள்ளது. வலதுபக்கம் எச்சில் மற்றும் ரத்த தடயங்கள் கிடைத்து உள்ளன. இறந்த தொழில்பதிபர் நொய்டாவை சேர்ந்தவர். அவரது இறப்பு செய்தியை கேட்டவுடனே குடும்பத்தினர் கான்பூருக்கு சென்று இருக்கிறார்கள்.

கடந்த ஞாயிறு அன்று தொழில்பர் தங்களிடம் போனில் பேசியதாகவும், எல்லாம் நல்லபடியாக உள்ளது என்று சொன்னதாகவும் அவர்கள் கூறி உள்ளனர். கரௌலி பாபாவை பொறுத்தவரை உடலில் ஏற்பட்ட காயங்களை ஆன்மீக முறைப்படி குணப்படுத்துவார் என்று மக்கள் நம்புகிறார்கள். இவர் அண்மையில் நொய்டாவை சேர்ந்த ஒரு மருத்துவரை தாக்கியதாக சர்ச்சையில் சிக்கியவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+