'உடனே ஆக்ஷன் எடுங்க'.. அதிகாரிகளுக்கு யோகி போட்ட உத்தரவு.. முழு வீச்சில் இறங்கிய உ.பி அரசு
லக்னோ: மக்களின் குறைகள் எதுவாக இருந்தாலும் அது கவனமாக கேட்டறியப்பட்டு நிறைவேற்ற தனது அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பொறுப்பேற்று 6 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இதனை மாநில பாஜக கோலாகலமா கொண்டாடி வருகிறது. ஏனெனில் இம்மாநில வரலாற்றில் இதற்கு முன்னர் யாரும் முதலமைச்சராக தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவியில் இருந்ததில்லை. எனவே யோகி ஆதித்யநாத்தை பாஜக கொண்டாடி வருகிறது.

அதேபோல இவரது ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், கட்டுமான பணியில் இருக்கும் திட்டங்கள் என அனைத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக கட்சியின் இந்த கொண்டாடங்களை பயன்படுத்தி வருகின்றனர். எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மூன்றுாவது முறைாக வெற்றி பெற வேண்டும் என்று முயன்று வருகிறது. இதற்காக பல்வேறு யூகங்களை வகுத்து அதை செயல்படுத்தியும் வருகிறது.
அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே பாஜக ஆட்சி இருப்பதால் அம்மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளையும் முழுமையாக கைப்பற்ற, மாநிலத்திற்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை வகுத்து வருகிறது. அதாவது, இந்த ஆண்டு தொடக்கத்தில் யோகி ஆதித்யநாத் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு முன்னர் உத்தரப் பிரதேசத்திற்காக நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு யாவும் டெல்லி, மும்பை போன்ற இடங்களில் நடந்தது. ஆனால் யோகி ஏற்பாடு செய்திருந்த மாநாடு உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் நடைபெற்றது. இதுவே அம்மாநிலத்தில் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த போவதாக யோகி அறிவித்தார். அதற்காக கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு என 10 துறைகளை மேம்படுத்த துறை சார்ந்த அதிகாரிகளிடம் விரிவான திட்டத்தையும் கேட்டிருக்கிறார். எதிர்வரும் 2025ம் ஆண்டுக்குள் இதனை சாத்தியப்படுத்த இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதேபோல சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதில் பல சமூக திட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட்டுக்கு முன்னெப்போதை விடவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்படி பல்வேறு பாசிடிவ் சம்பவங்களை செய்து வரும் யோகி ஆதித்யநாத் அதன் தொடர்ச்சியாக தற்போது அதிரடி உத்தரவை போட்டுள்ளார். அதாவது, "முதலமைச்சரின் தனி பிரிக்கு வரும் புகார்கள், குறை கடிதங்கள் அனைத்தும் கவனமாக பரிசீலிக்கப்பட்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மருத்துவ சிகிச்சைக்கான உதவி கோரி வருபவர்கள், நில ஆக்கிரமிப்பு பிரச்னைக்காக வருபவர்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். மாநிலத்தின் எந்த பகுதியிலிருந்து மக்கள் புகார் அளித்தாலும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications