"கொலையை யார் செய்ததுனு அனைவருக்கும் தெரியும்.." அகிலேஷ் யாதவை கை நீட்டி எச்சரித்த யோகி.. என்னாச்சு?
"இந்தக் கொலையை ரவுடி அடிக் அமகமது செய்தது என்று அனைவருக்கும் தெரியும். யார் இந்த ரவுடி அடிக் அகமது. சமாஜ்வாதி வளர்த்தெடுத்த ரவுடிகளில் ஒருவர்தானே"
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேருக்கு நேராகக் கையை நீட்டி கடுமையாக எச்சரித்தார்.
உத்த பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ கொலை வழக்கில் சாட்சி ஒருவரை மர்மநபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தை எழுப்பி அகிலேஷ் யாதவ் விமர்சித்ததால், முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் ஆத்திரமடைந்தார்.
மேலும், உத்தரப்பிரதேசத்தில் ரவுடி சாம்ராஜ்யத்தையே உருவாக்கிவிட்டு இன்று எங்களைக் குற்றம்சாட்டுகிறீர்களா? என்றும் யோகி கேள்வியெழுப்பினார்.

பட்டப்பகலில் கொலை
உத்தரப்பிரதேசத்தில் உமேஷ் யாதவ் என்பவர் நேற்று பட்டப்பகலில் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மேலும், அவருக்கு பாதுகாப்புக்கு இருந்த 2 போலீஸாரும் சுடப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ கொலை வழக்கில் கடைசி சாட்சியாக இருந்தவர்தான் இந்த உமேஷ் யாதவ். எம்எல்ஏ கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பயங்கர ரவுடி அடிக் அகமதுவின் உத்தரவின் பேரில்தான் இந்தக் கொலை நடந்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ரவுடி அடிக் அகமது சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உத்தரபிரதேச சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று எழுப்பிப் பேசினார்.

"ராம ராஜ்ஜியம் தோல்வி"
அகிலேஷ் பேசுகையில், "பட்டப்பகலில் உத்தரப்பிரதேசத்தில் கொலை நடக்கிறது. அதுவும் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவரை ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொலை செய்கிறார்கள். மேலும், பாதுகாப்புக்கு இருந்த போலீஸாரும் சுடப்பட்டிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் ராம ராஜ்ஜியத்தில் (பாஜகவை மறைமுகமாக குறிப்பிட்டு) சட்டம் ஒழுங்கு தோல்வியடைந்துவிட்டது" எனக் கூறினார்.

ஆத்திரமடைந்த யோகி ஆதித்யநாத்
அகிலேஷின் இந்த பேச்சால் ஆத்திரமடைந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், சட்டென எழுந்து நின்று அகிலேஷ் யாதவை நேருக்கு நேர் பார்த்து கையை நீட்டி எச்சரிக்கும் தொனியில் பேசினார். "இந்தக் கொலையைச் செய்தது யார் என்று அனைவருக்கும் தெரியும். ரவுடி அடிக் அகமதுதான் உமேஷ் யாதவை கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். யார் இந்த ரவுடி அடிக் அகமது? சமாஜ்வாதி வளர்த்தெடுத்த ரவுடிகளில் ஒருவர்தானே அவர். உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் ரவுடிகளுக்கு காட்ஃபாதராக இருப்பவர்தான் இந்த அடிக் அகமது.

"மரியாதையாகப் பேசுங்கள்"
உங்கள் (அகிலேஷ் யாதவ்) ஆட்சிக்காலத்தில் தான், உத்தரப்பிரதேசம் ரவுடிகள் சாம்ராஜ்யமாக மாறியது. இந்த மாஃபியா கும்பலை நாங்கள் (பாஜக அரசு) வேரறுத்து வருகிறோம். இன்று நீங்கள் எங்களையே குற்றம்சாட்டிப் பேசுகிறீர்களா? முதலில் மரியாதையாகப் பேசுங்கள். அது சரி.. உங்கள் தந்தைக்கே (முலாயம் சிங்) நீங்கள் மரியாதை தர மாட்டீர்கள். உங்களை நினைத்து நீங்களே வெட்கப்படுங்கள்" என யோகி ஆதித்யநாத் பேசினார். அப்போது தான் பேசி முடிக்கும் வரை, அகிலேஷ் யாதவை நோக்கி நேருக்கு நேராக கை நீட்டிக்கொண்டே அவர் பேசினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications