ரஜினிக்கு உபியில் இன்சல்ட்.. ஜெயிலர் படத்தின்போது பாதியில் எழுந்து சென்ற துணை முதல்வர் -யோகியும் வரல
லக்னோ: ஜெயிலர் படத்தை ரஜினியுடன் சேர்ந்து பார்க்காமல் துணை முதலமைச்சர் மௌரியாவை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அனுப்பி வைத்த நிலையில் அவரும், படத்தை முழுமையாக பார்க்காமல் பாதியிலேயே எழுந்து சென்று உள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கி, ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இருந்த போதும் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களையும் ஜெயிலர் எதிர்கொண்டிருக்கிறது. பாட்ஷா திரைப்படத்தின் சாயலில் இருப்பதாகவும் சிலர் விமர்சித்திருந்தனர். ஆனாலும் பாக்ஸ் ஆபீஸில் வசூல் பிரமாதமாக இருப்பதாகவே செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஜெயிலர் திரைப்படம் ரிலீசான போது திடீரென இமயமலை பக்கம் போய்விட்டார் நடிகர் ரஜினிகாந்த். ரிஷிகேஷ் முதல் பத்ரிநாத் வரை புனித யாத்திரை மேற்கொண்டார். ரிஷிகேஷில் தயானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் முகாமிட்டபடி இமயமலை யாத்திரையை ரஜினிகாந்த் மேற்கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வட இந்திய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.
சத்தீஸ்கர் மாநிலம் சென்ற ரஜினிகாந்த், அம்மாநில ஆளுநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவராக இருந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இமயமலை பயணத்தை முடித்த கையோடு சத்தீஸ்கருக்கு ரஜினிகாந்த் சென்றது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இதன் அடுத்தகட்டமாக நேற்று திடீரென உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ சென்றார் ரஜினிகாந்த். லக்னோ விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து ஜெயிலர் படம் பார்க்க வருகை தந்துள்ளேன் என்றார்.
இந்நிலையில் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் படம் பார்க்க முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. லக்னோவில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்குப் பதில் உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கலந்து கொண்டார். ஆனால், அவரும் படத்தை முழுமையாக பார்க்காமல் பாதியிலேயே எழுந்து சென்றது ரஜினிகாந்தை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications