பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு ரொக்க பரிசு வழங்கிய முதல் மாநிலம் உ.பி தான்.. யோகி பெருமிதம்
லக்னோ: நாட்டில் விளையாட்டு மற்றும் தடகளத்திற்கு புதிய உத்வேகத்தை பிரதமர் மோடி அளித்து இருப்பதாக வெகுவாக பாராட்டிய உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், இளம் தடகள வீரர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதில் தனது அரசு உறுதியாக இருப்பதாக உறுதிபட கூறினார்.
உத்தர பிரதேசத்தின் லோக் பவனில் நேற்று காவல்துறையில் திறன் வாய்ந்த வீரர்களுக்கான ( 'skilled player') இட ஒதுக்கீட்டு அடிப்படையில் காவல் பணியில் சேர்ந்த 227 காவலர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:- கேலோ இந்தியா, பிட் இந்தியா இயக்கங்கல் நாட்டிற்கு புதிய புரட்சியகாக அமைந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இளம் மற்றும் திறமையான தடகள வீரர்களுக்கு இந்த இயக்கங்கள் புதிய தளமாக அமைந்தன. இளம் தடகள வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு பஞ்சாயத்திலும் போர்க்கால் அடிப்படையில் விளையாட்டு மைதானங்கள் தயாராகி வருகின்றன. இதற்கான பணிகளில் வருவாய் துறை ஈடுபட்டுள்ளது. பள்ளிகளுக்கு அருகில் விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
முதல் கட்டமாக வட்டார அளவில் மினி ஸ்டேடியங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் மைதானங்கள் கட்டப்பட்டு வருகிறது. தடகள போட்டிகளை ஊக்குவிக்க அனைத்து மட்டத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 65 ஆயிரம் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு ரொக்க பணம் வழங்கி கவுரவித்த முதல் மாநிலம் உத்தர பிரதேசம் தான்.
விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களுகு ரொக்க பணம் பரிசு அளிக்கப்படுகிறது. தங்கம் வெல்லும் வீரருக்கு ரூ.6 கோடியும், வெள்ளிப்பதக்கத்திற்கு ரூ. 4 கோடியும், வெண்கல பதக்கத்திற்கு ரூ.2 கோடி பரிசும் வழங்கப்படுகிறது. அணியாக வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம் வென்றால் ரூ 3 கோடியும், வெள்ளி பதக்கத்திற்கு ரூ.2 கோடியும், வெண்கல பதக்கத்திற்கு ரூ.1 கோடியும் ரொக்க பரிசாக வழங்கப்படுகிறது. இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.












Click it and Unblock the Notifications