பெண்களின் இலவச பேருந்து பயணத்திற்கு ரூ.100 கோடி நிதி! உத்தரப் பிரதேச அரசு எடுத்த முக்கிய மூவ்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக ரூ.100 கோடியை ஒதுக்கியிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

UP Govt allocated Rs 100 crore for free bus travel for women

இந்நிலையில் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை யோகி ஆதித்யநாத் நிறைவேற்றியுள்ளார். அதாவது இனி 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உத்தரப் பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த திட்டத்தை யோகி ஆதித்யநாத் ஏற்கெனவே செயல்படுத்தியுள்ளார். தற்போது இதற்கான நிதி கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது ரூ.100 கோடி இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.200-300 கோடி வரை செலவாகும் என்று சொல்லப்படுகிறது. மாநிலம் முழுவதும் இதனால் 85 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் பயனடைவார்கள். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக உ.பி அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த இலவச பேருந்து திட்டம். பொருளாதாரம், சமூக வளர்ச்சி என இரண்டிலும் முன்னேற வேண்டும் என்பதுதான் உத்தரப் பிரதேசத்தின் குறிக்கோளாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+