என்னை பார்த்தா அப்படியா தெரியுது.. ப்ளூ கலர் "ஆண்ட்டி"க்கு வந்த கோபம்.. நடு ரோட்டில் ரணகளம்!

இளம்பெண்ணை பெண்கள் கும்பல் ஒன்று தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

லக்னோ: புளுகலர் ஜாக்கெட் அணிந்த வாட்டசாட்டமான ஒரு பெண்மணியை "ஆண்ட்டி" என்று கூப்பிட்டுவிட்டார் ஒரு இளம்பெண்.. அதுதான் ரணகளமாகிவிட்டது!

உத்திர பிரதேசத்தில், பாபுகஞ் என்ற கடைவீதி பகுதி ஒன்றில் பெண்கள் கும்பல் ஒன்று துணி வாங்கி கொண்டிருந்தது.. அப்போதுதான் திடீரென ஒரு சண்டை வெடித்தது.. வாய்த்தகராறு, அடிதடி என்று அந்த இடமே ரணகளமானது.

UP Woman slaps young girl for calling her Aunty, video goes viral on socials

மார்க்கெட்டில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் சொல்லவும், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் விரைந்து வந்தனர்.. அப்போதுதான், ஒரு இளம்பெண்ணை, அந்த மொத்த பெண்களின் கும்பலும் சரமாரியாக தாக்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்தனர்.

அந்த பெண்களிடம் இருந்து இளம்பெண்ணை மீட்க போலீசார் போராடினர்.. அப்போதுதான் விசாரணையில் தெரியவந்தது, அந்த இளம்பெண் அவர்களை ஆண்ட்டி என்று கூப்பிட்டு விட்டாராம்.. புளு கலர் ஜாக்கெட் அணிந்த பெண்ணை "ஆண்ட்டி" என்று யதேச்சையாக கூப்பிடவும், பளார் என்று இளம்பெண்ணின் கன்னத்தில் அறைந்துள்ளார் அவர்.

அந்த மார்க்கெட்டில் பகுதி எப்போதுமே பரபரப்பு நிறைந்துதான் இருக்கும் என்பதால், அன்றும் அப்படித்தான் தள்ளுமுள்ளு கூட்டம் நிறைந்திருந்தது.. ஆனால், ஒரே ஒரு இளம்பெண்ணை அத்தனை பெண்களும் சேர்ந்து தாக்கியதை ஒருத்தரும் முன்வந்து தடுக்கவில்லை.

மாறாக, வீடியோ மட்டும் தங்கள் செல்போனில் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டனர்.. என்ன ஆச்சரியம், வீடியோ பதிவிட்ட கொஞ்ச நேரத்திற்குள் ஒன்றைரை லட்ச பேர் பார்த்துவிட்டனர்..அந்த அளவுக்கு வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் புளுகலர் ஜாக்கெட் அணிந்த பெண்தான் முதலில் இளம்பெண்ணை அடிக்கிறார்.

அதற்கு பிறகுதான் மற்ற பெண்கள் ஒன்றுசேர்ந்து, அவரது தலைமுடியை பிடித்து இழுத்து அடிக்கிறார்கள்... அதிலும் பிரவுன் கலர் டிரஸ் அணிந்திருக்கும் பெண்தான், கடைசிவரை விடாமல் அந்த பெண்ணை விளாசி கொண்டிருந்தார்.. போலீசார் எதற்கு வந்தார்கள் என்றே தெரியவில்லை.. ஒரு பெண்ணையும் கன்ட்ரோல் செய்ய முடியவே இல்லை.. சண்டையை விலக்க முயற்சித்து கொண்டிருப்பது போலவே அந்த வீடியோ முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+