உத்தரபிரதேசத்தில் 57 தொகுதிகளில் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் உட்பட 57 தொகுதிகளில் இன்று நடைபெற்ற 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இறுதியாக, இன்று மாலை 5 மணி நிலவரப்படி அங்கு 53.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்று மாநில தேர்தல் அதிகாரி அஜய் குமார் சுக்லா கூறினார்.

இன்று நடக்கும் தேர்தலில் மொத்தம் 676 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பாஜகவை சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 5 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு மொத்தம் 1.5 லட்சம் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 10 மாவட்டங்களில் இந்த சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. 2.1 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களித்தனர்.
மொத்தம் 25,319 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கோரக்பூர் நகரம், பன்சி, எட்டாவா, துமரியாகஞ்ச், பல்லியா நகர், ஃபெப்னா பைரியா, சிக்கந்தர்பூர் மற்றும் பான்ஸ்திஹ் ஆகிய 9 தொகுதிகள் பதற்றம் நிறைந்த தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இங்கு இருக்கும் 57 தொகுதியில் 46ல் கடந்த 2017 சட்டசபை தேர்தல் பாஜக வென்றது. இதில் 7 தொகுதிகள் தனி தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் 292 தொகுதிகளில் ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இறுதியாக, இன்று மாலை 5 மணி நிலவரப்படி அங்கு 53.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்று மாநில தேர்தல் அதிகாரி அஜய் குமார் சுக்லா கூறினார்.
இது போக மீதம் உள்ள 54 தொகுதிகளில் இறுதிகட்ட தேர்தல் வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதியன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதியன்று நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications