உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்: 59 தொகுதிகளில் 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. மக்கள் ஆர்வம்!
லக்னோ: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 3-வது கட்டமாக 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
Recommended Video

இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. 59 தொகுதிகளில் மொத்தம் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.15 கோடி பேர் இன்று உத்தர பிரதேசத்தில் வாக்களிக்க உள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து 16 மாவட்டங்களில் உள்ள மேலும் 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது.
ஹத்ராஸ், ஃபிரோசாபாத், எட்டா, கஸ்கஞ்ச், மைன்புரி, ஃபரூகாபாத், கன்னோஜ், எட்டாவா, அவுரையா, கான்பூர் தேஹாத், கான்பூர் நகர், ஜலான், ஜான்சி, லலித்பூர், ஹமிர்பூர் மற்றும் மஹோபா ஆகிய மாவட்டங்களில் இன்று உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கிறது.
இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும். இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் தொகுதியில் இன்று தேர்தல் நடக்கிறது.
இங்கு பாஜக சார்பாக மத்திய அமைச்சர் எஸ்பி சிங் பாகேல் களமிறக்கப்பட்டு உள்ளார். அதேபோல் அகிலேஷ் யாதவின் உறவினர் சிவ்பால் சிங் யாதவ் போட்டியிடும் ஜாஸ்ஸ்வந்த்நகர் தொகுதியிலும் இன்று தேர்தல் நடக்க உள்ளது.இது அகிலேஷ் யாதவ் சட்டசபை தேர்தலில் நேரடியாக போட்டியிடும் முதல் தேர்தல் ஆகும். கர்ஹால் தொகுதியில் கடந்த 20 வருடமாக சமாஜ்வாதி தோல்வி அடைந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வாக்குப் பதிவு நடைபெறும் 59 தொகுதிகளில் 2017 தேர்தலில் 49 இடங்களில் பாஜக வென்றது. இங்கு மொத்தம் 8 இடங்களில் சமாஜ்வாதி வென்றது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. இது பாஜக வலிமையாக இருக்கும் தொகுதியாகும்.
உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே 117 இடங்களில் தேர்தல் முடிந்துவிட்டது. இன்று 59 இடங்களில் தேர்தலில் தேர்தல் நடக்கும் நிலையில் மீதம் உள்ள 117 இடங்களில் அடுத்த கட்டங்களில் தேர்தல் நடக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications