காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: காங்கிரஸ் & இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை நீக்கிவிட்டு ஷரியா சட்டத்தை அமல்படுத்துவிடுவார்கள் என்று பகீர் குற்றச்சாட்டை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்வைத்துள்ளார்.

நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதனால் நாடு முழுக்க பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Uttar Pradesh CM Yogi Adityanath Big Charge If Congress Wins They Will Bring Sharia Law


யோகி ஆதித்யநாத்: இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காங்கிரஸ் மீது சில கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்திவிடுவார்கள் என்றும் மக்களின் சொத்துக்களை கைப்பற்றிவிடுவார்கள் என்றும் பேசியுள்ளார்.

ஷரிய சட்டம்: அந்தத் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், “காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டுக்கு துரோகம் இழைத்தவர்கள். இப்போது மீண்டும் ஒரு முறை பொய்யான தேர்தல் அறிக்கையுடன் உங்களிடம் வந்துள்ளனர். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தீர்களா.. தாங்கள் ஆட்சி அமைத்தால், ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் என்கிறார்கள்.. இந்த நாடு அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தால் ஆட்சி செய்யப்பட வேண்டுமா அல்லது ஷரிய சட்டத்தால் ஆட்சி செய்யப்பட வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

காங்கிரஸ் கட்சி தங்களின் தேர்தல் அறிக்கையில், சில தனி சட்டங்களை கொண்டு வருவோம் என கூறியுள்ளது. அதாவது மோடி ஜி முத்தலாக் முறையை நிறுத்தியதால் ஷரியா சட்டத்தை அமல்படுத்தப்படும் என்பதையே அவர்கள் இப்படி கூறுகிறார்கள். மேலும், மக்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து அதை மறுபங்கீடு செய்து கொடுப்போம் என்று காங்கிரஸ் சொல்கிறது. உங்கள் சொத்துக்களை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் சூறையாட அனுமதிக்க விரும்புகிறீர்களா?

சொத்துகள் மீது குறி: அவர்கள் ஒருபுறம் உங்கள் சொத்துக்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். மறுபுறம் மாஃபியாக்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு அனைத்தையும் அள்ளி தருகிறார்கள். யார் உங்களுக்கு வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டு மக்களிடையே எப்போதும் அச்சம் இருக்கும். பயங்கரவாதிகளை கண்டு எப்போதும் அஞ்சி வாழும் சூழலே இருந்தது. ஆனால், 2014க்குப் பிறகு, பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டது. காஷ்மீரில் பயங்கரவாதத்தின் ஆணிவேராக இருந்த சட்டப்பிரிவு 370ஐ மோடி நீக்கினார். இதன் மூலம் நாட்டில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டது.

ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி


அஞ்சும் பாகிஸ்தான்: இப்போது எல்லையில் எதாவது பட்டாசுகள் சத்தமாக வெடித்தால் கூட பாகிஸ்தான் ஓடி வந்து எங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று தெளிவுபடுத்துகிறது. இந்தியாவில் எதாவது பயங்கரவாத சம்பவம் நடந்தால்.. அதற்கு எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டும் என பாகிஸ்தான் அஞ்சுகிறது.

அதே முழக்கம்: இந்த நாட்டை சுமார் 65 ஆண்டுகள் ஆட்சி செய்ய காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைத்தது.. ஆனால் அவர்கள் இந்த நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர எதுவும் செய்யவில்லை. பாட்டி (இந்திரா காந்தி) வறுமையை ஒழிப்பேன் என்றார்.. இப்போது அவரது பேரன் (ராகுல் காந்தி) கிளி போல் மீண்டும் அதையே சொல்கிறார். நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வரும் திட்டம் எதுவும் காங்கிரசிடம் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி தான் உண்மையாகவே வறுமையை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+